ETV Bharat / bharat

உயர் கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவின் 5 அறிவுரைகள்!

டெல்லி: உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஐந்து அறிவுரைகளை பல்கலைக்கழக மானியக் குழு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

HRD
HRD
author img

By

Published : Dec 27, 2019, 4:21 PM IST

பல்கலைக்கழக மானியக் குழு, உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐந்து அறிவுரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இதனை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார்.

மதிப்பீட்டல் முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது, பல்கலைக்கழக வளாகங்களில் சுற்றுச்சூழல் நலன் கருதி மாற்றங்கள் மேற்கொள்வது, தொழில் தர்மம் மற்றும் உயர் பண்புகளை மாணவர்களுக்கு கற்றுத் தருவது, ஆசிரியர்கள் தேர்வில் மாற்றம் கொண்டு வருவது, ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஆகிய பரிந்துரைகளை போக்ரியால் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து போக்ரியால், உயர் கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். திறன்களை மேம்படுத்தி அடுத்த தலைமுறை, முறையான வாழ்க்கையை மேற்கொள்ளவே இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்துவதில் மாணவர்கள் பெரிய பங்கினை ஆற்றுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடும்போட்டியாகும் பணமில்லாப் பரிவர்த்தனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.