மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்தான புகைப்படங்கள் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படங்களுடன் இரண்டு மது பாட்டில்கள் இருக்கும் புகைப்படமும் பதிவேற்றப்பட்டது.
இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி, அப்படத்தை நீக்கவும், பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கருத்துகளை தெரிவித்தனர். அதன்பின்பு இந்தப் படம் காலை 9.32-க்கு நீக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்கும் நபரின் கவனக்குறைவால் இப்புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக அந்த நபர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், சரியான விளக்கங்கள் உள்துறை அமைச்சகத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக வரவில்லை.
இதையும் படிங்க: பாஜக செய்தித் தொடர்பாளருக்கு கரோனா?