ஜம்மு காஷ்மீரில் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமத்தில் ரியாஸ் நாய்கோ நேற்றிரவு (மே 5) சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியாஸின் வீட்டுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவன் அவரது வீட்டுக்கு வந்தப் போது, அந்தப் பகுதியை சிஆர்பிஎஃப், ராஷ்ட்ரியா ரைபில்ஸ், சிறப்பு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், ரியாஸ் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு இதே அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவனான புர்கன் வாணி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு வந்த ரியாஸ் நாய்கோ, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தற்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.