கரோனா பெருந்தொற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெருந்தொற்று காலத்தில், திருநங்கைகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். ஒடிஸா மாநிலம் பத்ராக் பகுதியிலுள்ள திருநங்ககள் பலரும் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் உள்ளனர்.
"கரோனா பிரச்னையால் எங்களுக்கு எந்த வேலையும் இல்லை. அரசு எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. அரசு எங்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்கா விட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என சுனிதா என்ற திருநங்கை தெரிவித்தார்.
பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்வாதாரம் இந்த பெருந்தொற்று காலத்தில் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. அரசு வழங்கும் உதவிகள் திருநங்கைகள் அனைவருக்கும் போய்ச் சேரவில்லை.
எங்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசு வழங்கியிருந்தாலும், உதவிகள் எதுவும் கிடைக்கவில்லையென அஞ்சனா என்ற திருநங்கை தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை சமூக செயற்பாட்டாளர் அதிஷ் பெஹெரா என்பவர் செய்து வருகிறார். மேலும், அரசு இவர்களுக்கு நிவாரணத் தொகையையோ அல்லது ரேஷன் பொருள்களையோ உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பிள்ளைகளின் படிப்பைக் காட்டிலும் தாலி ஒரு பொருட்டல்லவே!