குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்டத்திற்கு எதிரான கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ராமசந்திர குஹா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதேபோல், ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என போராட்டகாரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். India After Gandhi, Makers Of Modern India, Democrats and Dissenters உள்ளிட்ட பல புத்தகங்களை ராமசந்திர குஹா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது' - ராணுவத் தளபதி பிபின் ராவத்