ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவரும் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் ஜனதா தள கட்சி குறித்தும், அதன் தலைவர் நிதிஷ்குமார் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கியத் தலைவர்கள் பதிலடி தற்போது கொடுத்துவருகின்றனர்.
ஜனதா தள கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி, "பிரசாந்த் கிஷோர் ஒன்றும் அரசியல் தலைவர் அல்ல. எனவே, அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை" என்றார்.
ஜனதா தள கட்சியின் அஜய் அலோக், "மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படித்தான் பேசுவார். ஒருபுறம் நிதீஷ்குமாரை 'எனது தந்தையைப் போல பார்க்கிறேன்' என்கிறார். மறுபுறம், அவரிடம் (நிதிஷ்குமார்) இல்லாத குறைகளையெல்லாம் கூறுகிறார்" என்றார்.
முன்னதாக பிரசாந்த் கிஷோர், "மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஐக்கிய ஜனதா தளம் ஒருபோதும் விட்டுவிடாது என்று நிதீஷ்குமார் எங்களிடம் கூறினார்.
ஆனால், இப்போது காந்தியின் கொலையாளி நாதுராம் கோட்சே மீது மென்மையான அணுகுமுறைகளை கொண்ட கட்சியுடன் இவர்கள் கூட்டணியில் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை காந்தியும் கோட்சேவும் கைகோர்த்து செயல்பட முடியாது" என்றிருந்தார்.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எஸ்... என்.ஆர்.சிக்கு நோ... - மகாராஷ்டிரா முதலமைச்சர் தாக்கரே