ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான தொழில்நுட்ப போர்: பின்னணி என்ன? - Coronavirus

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த நடவடிக்கை ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இந்த தொழில்நுட்ப உதவியுடன் இணைந்து நாமும் இந்த உயிர் கொல்லி கரோனா பாதிப்பை அழிக்க இணைத்திடுவோம்.

High-tech war on Corona
High-tech war on Corona
author img

By

Published : Mar 23, 2020, 9:18 AM IST

கரோனா (கோவிட்19) என்ற வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இது முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில் தான். தற்போது இது 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், நெதர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இதுவரை கரோனா பாதிப்பில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவை தடுக்க சீன அரசு ஒரு பெரிய போரை நடத்திவருகிறது. அந்நாட்டின் அரசு இந்த உயிர் கொல்லி நோயை தடுக்க சிறந்த முறையில் மருத்துவ குழுக்கள் மற்றும் சோதனை கூடங்கள் அமைத்து இரவு பகல் பாராமல் செயல்பட்டுவருகிறது.

வரும்முன் காப்போம் என்பதற்கிணங்க சிங்கப்பூர் அனைத்து பாதுகாப்பு ஆயத்தங்களுடன் இந்த நோயுடன் போராடி இறப்புகளை குறைத்துவருகிறது. தென் கொரியாவில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பை சோதிக்க நவீன முறையில் சோதனை கருவிகள் அமைத்து மிக விரைவாக செயல்படுத்திவருகிறது. இந்த கரோனா போர் பாதிக்கப்பட்ட நாடுகள் அல்லாமல் மற்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது.

சீனாவில் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

சீனாவில் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் கடிகாரம் சுற்றுவது போல் ஓய்வின்றி இந்த உயிர்கொல்லி கரோனாவை தடுக்க வேலை செய்து வருகிறார்கள். சந்தேகத்திற்கு உள்ளாயிருக்கும் நபர்களை நவீன முறை தொழில்நுட்ப உதவியுடன் மிக விரைவாக பரிசோதனை நடத்திவருகிறார்கள். கரோனா பாதிப்பு இருக்கிறது என்று பரிசோதனை செய்ய வரும் நபர்களை சில மணி நேரத்திற்குள் பரிசோதித்து அனுப்பிவிடுகிறார்கள்.

அந்த அளவிற்கு தொழில்நுட்பம் சிறந்த நண்பனாக சீனாவில் மாறியுள்ளது. இந்த பயன் பாட்டுக்குள் உள்ளிருக்கும் தொழில்நுட்பங்கள் ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் என்கிற செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், ட்ரோன்கள், ஆப்ஸ் என்கிற பயன்பாடு, புதிய இயந்திர கருவிகள் மற்றும் மொபைல் இணையம் சேவை. இந்த புதிய தொழில்நுட்பங்களை கொண்டு சீனா கரோனாவை எதிர்த்து போராடிவருகிறது.

தனித்துவமான பயன்பாடுகள் !!

சீனாவில் ஹாங்சோவில் உள்ள ஒரு பிரபலமான இ-கமெர்ஸ் நிறுவனம் கரோனா பாதிப்பை தன் மக்களுக்கு ஒரு செயலியின் மூலம் அவ்வப்போது என்ன நிலைமை என்று குறுந்தகவல் மூலம் நிலைமையை எடுத்துரைக்கிறது. இதில் மக்கள் அதிகம் செல்லக்கூடிய 200 நகரங்களில் வரைபடத்தின் மூலம் வண்ணக்குறியீடு தெரிவிக்கப்படுகிறது.

இது நோய்தொற்றின் அளவு தற்போதைய கரோனா வைரஸ் குறைவு எவ்வளவு என்பதை காட்டுகிறது. இந்த செயலியை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகிறார்கள். அந்த பயன்பாட்டில் பாதிக்கப்படாத பகுதிகள் பச்சை நிற வரைபடத்தால் தெரிவிக்கப்படுகிறது.

அங்கு சென்று மக்கள் தங்களை எந்த பயமுமின்றி பாதுகாக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மற்றும் அதில் மஞ்சள் நிற குறியீடு இருந்தால் குறைந்தது ஏழு நாள்கள் பயணத்தை ஒத்துவைக்க அறிவுத்துகிறது. மக்கள் அதிகம் பயணிக்கும் பகுதிகள் என்றால் குறைந்தது 14 நாள்களுக்கு பிறகே அங்கு பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் மேற்கொண்டால் இந்த செயலியின் மூலம் நாம் பயணிக்கும் நகரம் மற்றும் பாதை இவை ஆகியவை மொபைல் செய்தியாக நம்மிடம் வரும். இவை மூலம் நாம் விழிப்பாக இருக்காலம். மேலும் இதில் மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை நாள்களும் தெரிவிக்கப்படும். பள்ளி மூடப்பட்டிருந்தாலும் மாணவர்கள் நேரடியாக பாடம் கற்க இந்த செயலி மிகவும் உதவியாக உள்ளது.

இ-கமெர்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பு !!

அலிபாபா போன்ற இ-கமெர்ஸ் நிறுவனங்கள் தங்களின் சிறந்த சேவையை அளித்துவருகின்றன. ஓட்டுநர் இல்லாத வாகனங்களை அமைத்து அதை மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா பாதிப்பு நோயாளிகள் உள்ள பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப பயன்படுத்துகின்றன.

கம்யூனிஸ்ட் தொழிலாளர்களின் சேவை!!

சீனா கம்யூனிஸ்ட் கட்சி பல கோடி உறுப்பினர்களை கொண்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிக்கபட்ட பகுதிகளில் முதன்மையது வூஹான். இதில் ஒரு கோடி 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் தனிமைபடுத்தப்பட்டு தங்கள் வீட்டிலே தங்கியுள்ளனர். அவர்களுக்கு சீனா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தன்னார்வலர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று உணவு வழங்கிவருகிறார்கள்.

அர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ்,ரோபோட்ஸ் மற்றும் ட்ரான்ஸ் ஆகிய தொழில்நுட்பத்தின் சேவை!

பெய்ஜிங் மாகாணத்தை சார்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆயிரக்கணக்கானோர் கூடும் பகுதிகளில் தட்பவெட்ப நிலையை அறிந்து அவ்வப்போது மக்களுக்கு செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அலுவலகம் மற்றும் பொது இடங்களில் முகமூடி அணியாத நபர்களை காவல்துறைக்கு தெரிவிக்க இரண்டு அர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் நிறுவனங்கள் அமைக்கபட்டுள்ளன. அலுவலர்கள் மற்றும் காவல்துறை ஒலிபெருக்கி அமைத்து மக்களை ஒரு பகுதியில் திரட்டுகிறார்கள்।மற்றும் டிரோன்கள் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல உதவியாக உள்ளது.

ரோபோக்கள், ஸ்மார்ட் தலைக்கவசம், தட்பவெட்ப நிலை அறியும் கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள், முக அடையாளம் அறியும் கேமராக்கள் மற்றும் அதிநவீன மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட் தலைக்கவசம் அணிதல் 5 மீட்டருக்கு இருக்கும் நபருக்கு காய்ச்சல் இருந்தால் அது எச்சரித்துவிடும். மேலும் அர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் பாதிக்க பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த சிகிச்சை கொடுக்க உதவுகிறது.

தொலைத்தொடர்பு சேவைகள்!!

சீன தொழில்நுட்ப நிறுவனங்களும் மற்றும் மொபைல் சேவை மையங்களும் தங்களது நுகர்வுர்களின் தகவல்களை தற்போது காவல்துறைக்கு கொடுத்துள்ளது. இது மேலும் பாதிக்க பட்டவர்களை கண்டுபிடிக்க உதவியாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு நூடுல்ஸ் கடை உரிமையாளருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது என்றால் தொலைபேசி நிறுவனம் சம்மந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு தகவல் பெற்றது. இதில் சுமார் 3000 பேர் பாதிக்கப்பட்ட அந்த நபரின் கடைக்கு வந்துசென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக செயல்படும் சிங்கப்பூர்!!

சிங்கப்பூர் இந்த நோயை தடுக்க சிறந்த யுத்திகளை கையில் எடுத்துள்ளது. பார்க்கப்போனால் சிங்கப்பூரே அதிக அளவில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாடு. 100 மேற்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த நெருக்கடியான சூழலை சிங்கப்பூர் மிக சிறப்பாக கையாண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கிவருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்தும் யுக்தி பிற நாடுகளுக்கு ஒரு நல்ல படமாக உள்ளது. கடந்த ஜனவரி 23 வூஹான் நகரை சேர்ந்த 66 வயது முதியவருக்கு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அரசு அந்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை அறிவித்தது. இது சிவப்பு எச்சரிக்கைக்கு குறைவான எச்சரிக்கை உணர்த்தும் விதம். பள்ளிகள்,அதிக அளவில் மக்கள் கூடும் இடமான விழாக்கள், உணவு கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

அரசு ஒரு பொதுவான வாட்ஸ் ஆப் குரூப் அமைத்து மக்களின் சந்தேகங்களை போக்கும் படியும் தேவையற்ற வதந்திங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறது. அரசு ஊழியர்கள் அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டுகிறார்கள்.

அதேபோல, சீனாவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சீனாவிற்கு பயணம் செய்ய அனைத்து போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. விமானவழி, கடல்வழி மற்றும் சாலைவழி போக்குவரத்து கடுமையான சோதனைக்கு உட்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கரோனா பாதிப்பு இருக்கிறது என்று பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

தெற்கு கொரியாவில் கரோனா அதன் தாக்கமும்!!

ஐந்து பில்லியனுக்கு அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடு தென் கொரியா. இதில் தற்போது 8000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டு உலகமெங்கும் உயிர் இழந்தோரின் இறப்பு விகிதம் 3.4 சதவீகிதமாக உள்ளது. ஆனால் இது தென் கொரியாவில் 1 விழுக்காடாக உள்ளது.

தென் கொரியா கரோனா பாதிப்பு இருக்கிறதா என்று சந்தேகங்களுடன் வரும் நபர்களை 6 மணி நேரத்துக்குள் பரிசோதித்து, அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்துவருகிறது.

தினமும் 20 ,000 மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்கொள்ளப்படுத்தப்படுகிறார்கள். நாடு முழுவதும் பொது மற்றும் தனியார் மையங்கள் அமைத்து 24 மணி நேரமும் மக்களுக்காக செயல்பட்டுவருகிறது. 1,40,000 மேற்பட்ட சோதனை கருவிகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் மக்களை பரிசோதித்துவருகிறது. இந்த பரிசோதனை மூலம் 98 % வரை துல்லியமாக நோயை கண்டறியமுடியும்.

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் இவ்வாறு தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த நடவடிக்கை ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. இந்த தொழில்நுட்ப உதவியுடன் இனைந்து நாமும் இந்த உயிர் கொல்லி கரோனா பாதிப்பை அழிக்க இணைத்திடுவோம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.