ETV Bharat / bharat

குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது - ராகுல் காந்தி - குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது

டெல்லி : ”உயிரிழப்பு விகிதம் நாட்டிலேயே குஜராத்தில்தான் அதிகம் உள்ளது. இதன் மூலம் குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Raga
Raga
author img

By

Published : Jun 16, 2020, 12:57 PM IST

Updated : Jun 16, 2020, 1:12 PM IST

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் தவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் இதுவரை 4,128 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத்தில் 1,505 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ”மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில்தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிக உயிரிழப்பு சம்பவங்கள் குஜராத் மாநிலத்தில் நிகழ்கின்றன” என பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த விவரங்களைப் பகிர்ந்து ’குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது’ என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

  • ”குஜராத் - 6.25%
  • மகாராஷ்டிரா - 3.73%
  • ராஜஸ்தான் - 2.32%
  • பஞ்சாப் - 2.17%
  • புதுச்சேரி - 1.98%
  • ஜார்க்கண்ட் - 0.5%
    • Covid19 mortality rate:

      Gujarat: 6.25%
      Maharashtra: 3.73%
      Rajasthan: 2.32%
      Punjab: 2.17%
      Puducherry: 1.98%
      Jharkhand: 0.5%
      Chhattisgarh: 0.35%

      Gujarat Model exposed.https://t.co/ObbYi7oOoD

      — Rahul Gandhi (@RahulGandhi) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • சத்தீஸ்கர் - 0.35%" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக, குஜராத்தில் நாள் ஒன்றுக்கு 400 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் 24,104 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால், இதனை அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி மறுத்துள்ளார்.

நாட்டிலேயே, கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதிகம் பேர், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆனால், அம்மருத்துவமனையை சிறைச்சாலை என குஜராத் உயர் நீதிமன்றம் முன்னதாகக் குறிப்பிட்டது.

இதையும் படிங்க: தெலங்கானா ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மூவருக்கு கரோனா!

Last Updated : Jun 16, 2020, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.