கரோனா பாதிப்பிற்குள்ளானவர்களின் சிகிச்சைக்குப் பயன்படும் ரெம்டெசிவிர் என்ற முக்கிய மருந்தைத் தயாரிக்க இந்திய நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஹீட்டிரோ, சிப்லா ஆகிய நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்துகளைத் தயாரிக்க இந்திய மருந்துகள் ஒழுங்காற்று ஆணையம் அனுமதித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் துரிதகதியில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு தீவிரம் மிதமாக உள்ள நபர்களுக்குச் சுவாச சிக்கல் ஏற்படும்போது அவசர தேவைக்கேற்ப ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மருத்துவ வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
அதேவேளை, 12 வயதுக்குள்பட்டவர்கள், சீறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், அண்மையில் மகப்பேறு ஆனவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: எச்1 பி விசாவை நிறுத்திவைக்க திட்டமிடும் ட்ரம்ப்!