ஹரியானாவில் சிர்சா மாவட்டத்தில், வாகனத்தில் ஹெராயின் கடத்தப்படுவதாக மாநில குற்றப்பிரிவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் டிங் ரவுண்டாபவுட் (Ding roundabout) பகுதியில் குற்றப்பிரிவு துறையும், காவல் துறையும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரகசிய தகவலின்படியே அந்த குறிப்பிட்ட வாகனம் வருவதைப் பார்த்து, உஷார் ஆன காவல் துறையினர் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது, காரின் ஓட்டுநர் தப்பிக்க முயன்றார். இருப்பினும், காவல் துறையினர் மடக்கிப் பிடித்து இருவரைக் கைது செய்தனர்.
பின்னர் காவல் துறை அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ரமன்தீப் சிங், பிரகத் என்பதும், பிரகத் மீது ஏற்கெனவே போதைப் பொருள்கள் கடத்திய வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிமிருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள 500 கிராம் ஹெராயினும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மதுவிற்பனையில் ஈடுபட்ட இருவர் - காவல்துறை கைது நடவடிக்கை!