ETV Bharat / bharat

இந்தியாவில் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை!

27 சர்ச்சைக்குரிய பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை இந்தியாவின் ஏற்றுமதியை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்று வேளாண் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தொழில்துறையின் பரிந்துரைகளை எடுத்துக்கொண்டபின் அரசாங்கம் இதுபோன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

27 pesticides banned
27 pesticides banned
author img

By

Published : May 23, 2020, 11:57 AM IST

டெல்லி: 27 வகையான பூச்சுக்கொல்லிகளைத் தடைசெய்யும் வரைவை மே 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து வேளாண் வல்லுநர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் விவசாயிகள் உபயோகித்து வரும் 66 பூச்சிக்கொல்லிகளில், 27 பூச்சிக்கொல்லிகளை தடை செய்வதற்கான வரைவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பேசிய பாரதிய கிருஷக் சமாஜ் தலைவர் கிருஷ்ணா வீர் சவுத்ரி, ”இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 80 விழுக்காடு பூச்சிக்கொல்லிகள், அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒருபுறம், பிரதமர் மோடி அதிக ஏற்றுமதியை ஊக்குவிக்கிறார். ஆனால், கொள்கையை வடிவமைப்பவர்கள் அது குறித்து யோசிப்பதாகத் தெரியவில்லை.

'இ.எம்.ஐ. காலக்கெடு நீட்டிப்பை மக்கள் கவனத்துடன் அணுக வேண்டும்'

வழக்கமாக, இந்தியாவில் விவசாயிகள் திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களைப் பயிரிடுவதில் மான்கோசெப் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துகிறார்கள். பிற நாடுகளும் பயிர்களைப் பாதுகாக்க இதைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், இதுபோன்ற பொருள்களுக்குத் தடை விதிப்பது, நம்மை நாமே காயப்படுத்துவதற்குச் சமம்," என்று கூறினார்.

மே 14 அறிவிப்பின்படி, நிறுவனங்கள் தங்கள் பிரச்னைகளையும், பரிந்துரைகளையும் முன்வைக்க 45 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டன. ஆதாரங்களின்படி, அனைத்துப் பூச்சிக்கொல்லி நிறுவனங்களும் ஒன்றாக வந்து நீதிமன்றங்களை அணுக வேண்டும் என பல தரப்பிலிருந்து கூறப்பட்டுவருகிறது.

அரசின் அறிவிப்பு

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் பல வகை பூச்சிக்கொல்லிகளைப் பல நாடுகளில் நெடுங்காலத்துக்கு முன்பே தடை செய்துள்ள நிலையில், இந்தியாவில் இன்றளவும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தக்காளி கிலோ ரூ.3 முதல் விற்பனை - கவலையில் விவசாயிகள்

இவற்றில் 27 வகை பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதற்கான வரைவை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த எதிர்ப்புகள், கருத்துரைகள் ஆகியவற்றை 45 நாள்களுக்குள் பரிசீலித்த பின் இறுதி உத்தரவு ஜூலை மாதம் பிறப்பிக்கப்படும்.

அசிப்பேட், அட்ராசின், பென்பியூராகார்ப், கப்டான், டையூரான், மாலத்தியான், சைனீப், சீரம் ஆகியவை தடை செய்யப்படவுள்ள பூச்சிக்கொல்லிகளில் அடங்கும். இறுதி உத்தரவு வந்தபின் இவற்றைத் தயாரிக்க, இறக்குமதி செய்ய, விற்க, கொண்டுசெல்ல, வழங்க, பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.