புகையிலைப் பொருள்கள் மீது அச்சிடப்பட வேண்டிய புதிய எச்சரிக்கைப் புகைப்படங்கள் பற்றிய விவரங்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இரண்டு வகையான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் முதல் வகை புகைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் அச்சிட வேண்டும். இரண்டாவது வகையான புகைப்படத்தை அடுத்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அச்சிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை புகையிலைத் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள். ஏற்றுமதியாளர்கள் என புகையிலைப் பொருள் உற்பத்தியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும். இந்த விதிகளை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 20, 2003படி கைது செய்யப்பட்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருள்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 சதவிகிதம் பேர் புகையிலை உபயோகிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புகையிலை ஒழிப்பு தினம்