ETV Bharat / bharat

கரோனா தொற்று அதிகரிப்பால் கிராமத்திற்கு சீல்: மல்லாடி கிருஷ்ணாராவ் - கரோனா தொற்று

புதுச்சேரி :  கூனிச்சம்பட்டு கிராமத்தில் இன்று (ஜூன் 24) மட்டும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அந்த கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர்
சுகாதாரத்துறை அமைச்சர்
author img

By

Published : Jun 24, 2020, 6:56 PM IST

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், புதுச்சேரியில் இன்று (ஜூன் 24) ஒரே நாளில் 59 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 58 பேர் புதுச்சேரிக்கும், ஒருவர் மஹே பகுதிக்கும் சென்னையில் இருந்து வந்தனர்.

புதுச்சேரியில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. நாளை (ஜூன் 25) முதல் புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் வேன் மூலம் மருத்துவக் குழுவினர் கொண்டு பரிசோதனை செய்ய உள்ளோம். தற்போது, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகள், தனியார் மருத்துவமனையில் 50 பேரும், பல் மருத்துவமனையில் 25 பேர் என பிரித்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதனால், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிரமம் இல்லாமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மேலும், புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தில் இன்று ( ஜூன் 24) மட்டும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அந்த கிராமமே சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.