நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய, அனைவருக்கும் தூக்கு தண்டனை உறுதியானது.
தொடர்ந்து குற்றவாளி முகேஷ் சிங், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அதனோடு உச்சநீதிமன்றம் விதித்த ப்ளாக் வாரண்ட்டை நீக்குமாறு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்ற நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
அதனோடு கருணை மனு மீதான நடவடிக்கை பற்றி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு குற்றவாளி முகேஷுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை எனவும் தெரிவித்தது.