ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏழு மாத காலத்திற்கு பிறகு, மார்ச் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசியல் நம்மை பிரிப்பதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை மீண்டும் மாநிலத்துக்கு அழைத்து வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். அவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் விடுக்கப்படும் இந்த கோரிக்கைக்கு அனைவரும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை