உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மகளிர் ஆணையம், பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து வழக்கை விரைந்து நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அம்மாநில உள்துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரான்த் வீர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தடயவியல் ஆதாரங்களுக்காக காவல்துறை காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தடுத்து நிறுத்திய காவல் துறையினர்: ஹத்ராஸிற்கு நடந்தே போகத் துணிந்த ராகுல், பிரியங்கா காந்தி!