ETV Bharat / bharat

வீழ்கிறதா மோடி - அமித் ஷா இணை? - chidambaram

மகாராஷ்டிராவில் பாஜக இப்போது அடைந்திருக்கும் தோல்வி, இந்தக் காவிக்கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ஏனென்றால், அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக வலுவாக இருந்த இடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டவர் மோடி. முக்கியமாக இதோபோல மோடியை வீழ்த்த ஒருவர் எப்போது வளர்வார் என்று யாருக்கும் தெரியாது.

Modi-Shah duo
Modi-Shah duo
author img

By

Published : Dec 10, 2019, 7:37 PM IST

மோடி - ஷா இணை

நரேந்திர மோடி - அமித் ஷா இணை ஏற்கெனவே தங்கள் உச்சத்தைத் தொட்டுவிட்டனர். 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்த இந்த காவி இணை, அதன் பின் இறங்கு முகத்தையே சந்தித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு மிகச் சிறந்த தேர்தல் பரப்புரையால் ஆட்சியைப் பிடித்த பாஜக, சமீப காலங்களில் தேர்தல்களை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளதைப் போலத் தெரிகிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் பாஜக சரிவைச் சந்தித்தது. அதன்பின் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுதாரித்துக்கொண்ட பாஜக, பெரும் வெற்றியைப் பெற்றது.

Modi-Shah duo
மோடி - அமித் ஷா

இந்த வெற்றிக்குப் பின் ஏற்பட்ட ஆணவத்தால், ஹரியானா மாநிலத்தில் வெற்றிபெற பாஜக தவறியது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் தேர்தலுக்கு முன்னரே கூட்டணியில் இருந்தபோதும், எதிர்பார்த்த வெற்றி பெற இயலவில்லை. இதனாலேயே தேர்தலுக்குப் பின் புதிதாக அமைந்த சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளிடம் பாஜக ஆட்சியை இழந்தது. தேர்தலின்போது களத்தில் வேலை செய்த பாஜகவினரை சிவசேனாவின் இந்த நம்பிக்கைத் துரோகம் பெரிதாக பாதிக்கவில்லை. மாறாக எதிர் தரப்பின் இந்த துரோகத்தை முறியடிக்கத் தவறிய தலைமையின் மீதே அவர்களது கோபம் திரும்பியுள்ளது. இதுதான் அவர்களை அதிகம் காயப்படுத்தியது.

மாநிலங்களை இழக்கும் பாஜக

பல தலைமுறைகளாக இதுபோன்ற அதிகாரப் போட்டியை நடத்துவதில் கில்லாடியான சரத்பவாரை எதிர்கொள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ்ஸால் முடியாது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் உள்ளே நுழைந்தபோதும் நிலைமை கையை மீறிவிட்டது. கட்சி தலைமைக்கும் ஒருவித நம்பிக்கையின்மை தோன்றிவிட்டது. கடந்த ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை பெற வாய்ப்பிருந்தும், கமல்நாத்திடம் ஆட்சியை பாஜகவினர் இழந்தனர். அதேபோன்ற அக்கறையில்லா தன்மைதான், பாஜகவிடம் மகாராஷ்டிராவிலும் காணப்பட்டது.

Modi-Shah duo
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

மத்திய பாஜக தலைமையே மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சௌவகானின் ஆட்சியைத் தொடர்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் இழந்தது. இது பாஜக தலைவர்களிடமிருந்து முரண்பாடுகளைக் காட்டியது. ஆனால், எளிதில் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும் என்ற நிலை இருந்தபோது, நாட்டின் மிக முக்கிய ஒரு மாநிலத்தை இழந்திருப்பது அக்கட்சிக்கு நல்லதல்ல. ஒன்று அல்லது இரண்டு மாநிலங்களை இழப்பதைப் பற்றி அதிகாரத்திலிருக்கும் மோடி - ஷா இணை கவலைப்படுவதில்லை என்ற எண்ணத்தை வளர்க்கக்கூடாது. இது ஒரு சில மாநிலங்களின் வெற்றி தோல்வியைப் பற்றிய விவகாரம் மட்டுமில்லை, ஏனென்றால் பாஜக தற்போது மொத்தமுள்ள மாநிலங்களில் பாதிக்கும் குறைவான மாநிலங்களிலேயே ஆட்சியில் உள்ளது.

Modi-Shah duo
மோடி - அமித் ஷா

காரணங்கள் என்ன?

இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம், ஒன்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசை நிர்வகிப்பதிலேயே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுகிறார். தன்னை ஒரு மூத்த அரசியல்வாதியாகக் கருதும் நரேந்திர மோடி, சூழ்ச்சியையும் தந்திரங்களையும் கையாண்டு ஆட்சியைப் பிடித்து தன் கைகளை அழுக்குப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை... கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்திலும், கடந்த மாதம் மகாராஷ்டிராவிலும் நடைபெற்றதை போல. வலுவான பாஜக மட்டும் இதற்கான தீர்வில்லை, மோடி இல்லாத வலுவான பாஜகவை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது.

Modi-Shah duo
கமல் நாத்துடன் மோடி

மற்றொன்று, அமித் ஷா போன்ற தலைசிறந்த ஒரு நிர்வாகி, முக்கியமான உள்துறையையும் நிர்வகிப்பதால், அவரால் கட்சிக்குத் தேவையான பணிகளில் கவனம் செலுத்த முடிவதில்லை. தற்போது பாஜக செயல் தலைவராகவுள்ள ஜே.பி. நட்டாவின் நிர்வாகத்தன்மையும் தேர்தலில் வெற்றி பெறும் திறமையும் இன்னும் சோதிக்கப்படவில்லை. கட்சிக்குத் தேவைப்படும் நேரத்தை அமித் ஷா ஒதுக்கும்போதும், தனது உள்துறையைத் தவிர பிற துறைகளையும் அவர் மேற்பார்வையிட வேண்டியுள்ளதால், கட்சிப் பணிக்குத் தேவையான நேரத்தை அவரால் ஒதுக்க முடியவில்லை.

இதையும் படிங்க: முத்ரா திட்டமும், பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும்!

ஆபத்தில் பாஜக?

மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்து வருவதற்கு தலைமையிலுள்ள இந்த இருவர் மட்டும் காரணமில்லை. பொதுவாகவே, ஐந்து ஆண்டுகள் ஒரு கட்சி ஆட்சியிலிருந்தால் பொது மக்களிடையே அதிருப்தி தோன்றுவது இயற்கை. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் எந்தவொரு தலைவராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நான்கில் மூன்று பங்கு இடங்களை இந்திரா காந்தி கைப்பற்றினார். ஆனால் 1974ஆம் ஆண்டு, வெறும் நான்கு ஆண்டுகளில் அதே இந்திரா காந்தி மக்களால் வெறுக்கப்படும் ஒரு தலைவராக மாறினார்.

Modi-Shah duo
மோடி - அமித் ஷா

மகாராஷ்டிராவில் பாஜக இப்போது அடைந்திருக்கும் தோல்வி, இந்தக் காவிக்கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ஏனென்றால், அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை. ஆம், தற்போது மோடிதான் நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர். அவருக்கு நிகராக எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவர் கூட இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் மிக வலுவாக இருந்த இடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டவர் மோடி. முக்கியமாக இதோபோல பொருளாதார மந்த நிலையுள்ள காலத்தில், மோடியை வீழ்த்த ஒருவர் எப்போது வளர்வார் என்று யாருக்கும் தெரியாது.

சில நேரங்களில் மட்டும் உண்மையைப் பேசும் மன்மோகன்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உண்மை என்பது நெகிழ்வுத் தன்மையுடனும் சுயநலத்துடனேயே இருக்கிறது. அவரது சமீபத்திய பேச்சே அவரது உண்மைக்கும் நேர்மைக்கும் ஒரு சான்று. முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜரால் நினைவு நிகழ்ச்சியில் பேசிய மன்மோகன் சிங், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் நரசிம்ம ராவே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், குஜரால் ராணுவத்தை களமிறக்கச் சொன்னபோதும் நரசிம்ம ராவ் மறுத்ததே, படுகொலைகள் நடக்கக் காரணம் என்றார். ஆனால், தன்னை நிதியமைச்சராக ஆக்கியதே நரசிம்ம ராவ் தான் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும்.

Modi-Shah duo
மன்மோகன் ஷா

நரசிம்ம ராவ் இறந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. தன்னை பிரதமராக ஆக்கியவர்களை இப்போது மன்மோகன் சிங் மகிழ்விக்க வேண்டும். ஆகையால்தான், அப்போது நரசிம்ம ராவ் முன்னள் பிரதமர் ராஜிவ் காந்தியிடமிருந்து வந்த கட்டளைகளைப் பின்பற்றியதையும் அவர் (ராஜிவ் காந்தி) கூறுவதற்கு முன் ராணுவத்தை களமிறக்காததையும் கூறவில்லை.

ராஜிவ் காந்தியும் அவரது சகாக்களும் சீக்கியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்ததால் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது மன்மோகன் சிங் நிதி அமைச்சகத்தில் செயலராகப் பொறுப்பிலிருந்தார். பொறுப்பிலிருந்து விலகும் முடிவை விடுங்கள்... இந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக குரல் கூட அப்போது அவர் எழுப்பவில்லை. தன் வாழ்க்கை முழுக்க மன்மோகன் சிங் இதுபோலவே இருந்தார்.

உண்மைத்தன்மையற்ற ப. சி

இங்குள்ள அனைவரும் நியாபக மறதியால் தவிக்கிறோம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நினைக்கிறார் போலும், அவரது காலத்தில் இதைவிட மோசமான ஜிடிபிகளையும், விண்ணை முட்டும் வெங்காய விலையையும் நாம் பார்த்துள்ளோம். ரகுராம் ராஜனுக்கும் உர்ஜித் பட்டேலுக்கும் இரண்டாம் முறை பொறுப்பு அளிக்கவில்லை என்று குறை கூறும் ப. சிதம்பரம் எப்போது ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் இணக்கமாக இருந்துள்ளார்.

Modi-Shah duo
ப சிதம்பரம்

சிதம்பரத்திடம் தான் பட்ட அவஸ்தையை விவரித்து புத்தகத்தையே எழுதியுள்ளார் ஒரு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர். அவர்தான் டி. சுப்பாராவ். தலைகணமிக்க சிதம்பரம், தன்னை நசுக்க முயன்றதாக சுப்பாராவ் குறிப்பிடுகிறார். திமுக இல்லாவிட்டால், அவரது சொந்த ஊரான சிவகங்கையிலேயே மக்கள் சிதம்பரத்தை மதிக்கமாட்டார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர் யாரையும் ஏமாற்ற முடியாது.

இந்தக் காலாண்டின் மொத்த வளர்ச்சி ஐந்து விழுக்காட்டுக்குக் கீழ் குறைந்திருப்பதைப் பற்றி ஒரு புகழ்பெற்ற கட்டுரையாளர் கூறினார், "இதில் ஆச்சரியம் என்ன? ஒரு இந்துத்துவ கட்சி இந்து வளர்ச்சி விகிதத்தைப் பற்றி அல்லவா கவலைப்படும்" என்று!

இதையும் படிங்க: தடம் புரளும் இந்திய ரயில்வே!

Intro:Body:

Has BJP peaked already, or suffers from neglect by Modi-Shah duo ?

Despite Modi’s popularity, party needs regional leaders to win States

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.