ETV Bharat / bharat

ராகுலும் பிரியங்காவும் ‘நடமாடும் பெட்ரோல் குண்டுகள்’ ஜாக்கிரதை!

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நடமாடும் பெட்ரோல் குண்டுகள், இருவரிமும் கவனமாக இருங்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார்.

Haryana minister calls Priyanka and Rahul 'live petrol bombs'

author img

By

Published : Dec 25, 2019, 1:10 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த சூழலில், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் சென்ற காரை வழிமறித்த அம்மாநில காவல் துறையினர், மீரட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்து இருவரையும் திருப்பி அனுப்பினர்.

இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திருக்கும் நிலையில், ஹரியானா மாநிலத்தின் அமைச்சரும் பாஜக தலைவருமான அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரையும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், “ராகுலும் பிரியங்காவும் ’நடமாடும் பெட்ரோல் குண்டுகள்’. அவர்கள் எங்கு சென்றாலும் தீயைப் பற்றவைத்து பொதுச்சொத்துகளை அழிக்கச் செய்கின்றனர். எனவே, அவர்கள் இருவரிடமும் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Beware of @priyankagandhi and @RahulGandhi as they are live Petrol Bombs where ever they go they ignite fire and cause loss to Public Property.

    — ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ’மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் இவர் தெரிவித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: சின்ன மீனைப் போட்டு பெரிய மீனுக்கு வலை விரிக்கிறதா பாஜக? - எச்சரிக்கும் அரசியல் தலைவர்!

Intro:Body:

https://www.aninews.in/news/national/politics/haryana-minister-anil-vij-calls-priyanka-and-rahul-live-petrol-bombs20191225065002/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.