ஹரியானா மாநிலத்தில் 90 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் நாள் நடைபெறவுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் ஒரு கோடிய 81 லட்சத்து 91ஆயிரத்து 228 பேர் பொது வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 486 பேர் சேவை வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டில் வாக்குச்சாவடியின் எண்ணிக்கை 19.58 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இந்திய தேசிய லோக் தளம், ஜேஜேபி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
இரண்டு முக்கிய தொகுதிகளும் வேட்பாளர்களும்.
கர்னல் : முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் போட்டியிடும் இத்தொகுதியில் அவருக்கு எதிராக ஜே.ஜே.பி கட்சி பி.எஸ்.எஃப் வீரரான தேஜ் பகதூர் யாதவ் போட்டியிடுகிறார்.
கைத்தால் : காங்கிரஸ் மூத்தத் தலைவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவின் கோட்டையாகக் கருதப்படும் இந்த தொகுதியில், 2000 ஆம் ஆண்டு இத்தொகுதியில் வெற்றிபெற்ற லீலா ராம் குஜ்ஜாரை ஐ.என்.எல்.டி வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : #ViralVideo 'ஹரியானாவில் காங்கிரஸ் ஏன் இப்படி இருக்கிறது?' - கடுப்பான அகமது படேலின் வீடியோ