ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் 90 சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
அதில் ஆளும் பாஜக 39 இடங்கள், காங்கிரஸ் 32 இடங்கள், ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்கள், சுயேச்சைகள் 8 தொகுதிகள், இந்திய தேசிய லோக்தளம் ஒரு தொகுதி முன்னிலையில் உள்ளன
வெற்றிபெறுவதற்கு 90 தொகுதிகளில் 46 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். இதன்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. அம்மாநிலத்தின் ஜனநாயக் ஜனதா கட்சி தொடங்கி ஓராண்டேயான நிலையில் அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்ததால் 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் 32 இடங்களில் முன்னிலை வகிப்பதால், அது தற்போது ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிடம் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இது பெரும்பான்மைக்கு அருகில் இருக்கும் பாஜக ஆட்சியமைக்க பின்னடைவை ஏற்படுத்துமா என்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகே தெரியவரும்.
மேலும் தெரிந்துகொள்ள: #Live மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்!