ETV Bharat / bharat

விமானங்களின் தகவலை பாகிஸ்தானுக்கு அளித்த எச்ஏஎல் அலுவலர் கைது! - எச்ஏஎல் அலுவலர் கைது

மும்பை: இந்திய போர் விமானங்களின் விவரங்களை பாகிஸ்தானிடம் பகிர்ந்த எச்ஏஎல் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
கைது
author img

By

Published : Oct 9, 2020, 3:02 PM IST

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்தான், இந்திய விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. சில பாகங்கள் மட்டும் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், இந்திய போர் விமானங்களின் விவரங்களை பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, மும்பை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "எச்ஏஎல் நிறுவனத்தில் பணிபுரியும் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் போர் விமானங்கள் குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடம் பகிர்ந்துள்ளார். நாசிக்கில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பிடம் அவர் தொடர்பில் இருந்துள்ளார்.

நாசிக்கில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தின் தகவல்கள் குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். அவரிடமிருந்து மூன்று மொபைல்போன்கள், இரண்டு சிம் கார்டுகள், இரண்டு மெமரி கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொபைல் போன்கள், சிம் கார்டுகள் ஆகியவை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரை பத்து நாள்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பது மோடியின் அறியாமை அல்ல - வேறொரு காரணத்தை சொல்லும் ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.