ETV Bharat / bharat

'குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ்' சர்ச்சையை ஏற்படும் குஜராத் பாடப் புத்தகம்! - Congress behind Godhra train Fire

காந்திநகர்: குஜராத் கலவரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் சதி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

GODHRA FIRE
author img

By

Published : Nov 23, 2019, 12:27 PM IST

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில், குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அதில், 59 பேர் தீயில் கருகி பலியாயினர்.

அதன் விளைவாக, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நீடித்த இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில், பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாவர்.

இந்நிலையில், சபர்மதி விரைவு ரயில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக குஜராத் பள்ளிப் பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது.

'குஜராத்தின் அரசியல் வரலாறு' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த பாடப் புத்தகக்தில், "மாநில அரசைக் கவிழ்க்கும் நோக்கில், 2002 பிப்ரவரி 27ஆம் தேதி, அயோத்தியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரயில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதில் 59 இந்து மத சேவகர்கள் தீயில் கருகி இறந்தனர். இந்த சதிக்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர்" என்ற வரி இடம்பெற்றுள்ளது.

இதுதவிர, நர்மதா அணை திட்டத்தைச் செயல்படுவதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பள்ளிப் பாடப்புத்தங்களில் இடம்பெறச் செய்து, யுனிவர்சிடி கிரான்ட் நிமான் போர்டு (University Granth Nirman Board)-க்கு பாஜக காவி சாயம் பூசப்பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இதுகுறித்து பாஜக மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு UGNB-யால் வெளியிடப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய பாடப் புத்தகத்தின் ஆசிரியர் முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், UGNB தலைவருமான பாவ்நாபென் தாவே ஆவார்.

இதையும் படிங்க : இடதுசாரிகளால் இணைந்த குஜராத் கலவரத்தின் எதிரெதிர் துருவங்கள் - காலம் காயங்களை ஆற்றும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.