ETV Bharat / bharat

ஒன்றரை வயது மகனைப் பிரிந்து, காவல் பணி செய்யும் பெண் சிங்கம்!

அகமதாபாத்: காவல் துணை பெண் ஆய்வாளர் ஒருவர், தனது ஒன்றரை வயது மகனைப் பிரிந்து கரோனா வைரஸூக்கு எதிரான போரில் கடமையாற்றி வருகிறார்.

Gujarat cop  lockdown  covid-19  ahmedabad  காவல் பணியில் பெண் சிங்கம்  குஜராத் பெண் காவலர், பாவ்னாபென் தேசாய்  கரோனா வைரஸ் பாதிப்பு, கோவிட்-19 பெருந்தொற்று போராட்டம்

author img

By

Published : May 2, 2020, 12:55 AM IST

நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொற்று பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம், சுகாதாரப் பணியாளர்களும், காவலர்களும் தங்களுடைய பணியை முன்னின்று செயல்படுத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், துணை காவல் ஆய்வாளர் பாவ்னாபென் தேசாய், முழு ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து காவல் பணி கடமையில் இருக்கிறார். அதனால், அவர் தனது ஒன்றரை வயது மகனை, சொந்த கிராமத்தில் உறவினர்களிடம் விட்டுவிட்டு திரும்பியிருக்கிறார்.

முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு, பவ்னாபென் தேசாய், தனது மகனுடன் மெஹ்சானாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், இத்தனை நாட்கள் தனது குழந்தையைப் பிரியப்போகிறார் என்ற உண்மையை அறியாமல், அவர் மார்ச் 24ஆம் தேதி முதல் இடைவெளி இல்லாமல், ஊரடங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பவ்னாபென் தேசாய், டானிலிம்டா காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். நகரின் அந்தப் பகுதியிலிருந்து பல கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற நேரத்திலும், பவ்னாபென் தனது சொந்த வாழ்க்கையைப் பணயம் வைத்து, தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறார்.
கரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளை சமநிலையாகக் கையாண்டு உண்மையான போர்வீரர்களாக நிற்கும் பல 'போற்றப்படாத ஹீரோக்களும்' இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள், பவ்னாபென் போல...!

இதையும் படிங்க: முழு அடைப்பு நீட்டிப்பு: அனுமதி, மறுப்பு யாருக்கு? புதிய வழிகாட்டுதல்கள் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.