ETV Bharat / bharat

தற்சார்பு இந்தியா 3.0: தொழில் நிறுவனங்களுக்கும், சமானியர்களுக்கும் கிடைப்பது என்ன?

author img

By

Published : Nov 12, 2020, 4:44 PM IST

Updated : Nov 12, 2020, 6:58 PM IST

பொருளாதாரத்தை மீட்பதற்காக தற்சார்பு இந்தியா 3.0 என்ற பெயரில் நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், தொழில் நிறுவனங்கள், சமானியர்களுக்கு சாதகமான அம்சங்கள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

Finance Minister Nirmala Sitharaman
'அக்டோபர் மாதத்தில் 10 விழுக்காடு உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்'- நிர்மலா சீதாராமன்

டெல்லி: கடுமையான, நீடித்த ஊரடங்கிற்குப் பின்பு இந்திய பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (நவம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "எரிசக்தி நுகர்வு வளர்ச்சி அக்டோபரில் 12 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் 10 விழுக்காடு உயர்ந்து 1.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வங்கிக் கடன் வழங்கல் 5.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. அந்நிய முதலீடும் ஏப்ரல்- ஆகஸ்ட் வரையில் 35.37 பில்லியன் டாலரிலிருந்து 13 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மூன்றாவது காலண்டியில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், 26.62 லட்சம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 13.78 லட்சம் விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்ததாக கருதப்பட்டு 12,373.33 கோடி ரூபாய் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளும் நல்ல பலன்களை தந்துள்ளன. கிசான் கடன் அட்டைகள் 157.44 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 1,43,262 கோடி ரூபாய் இரண்டு கட்டங்களாக கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

பொருளாதாரத்தை மீட்பதற்காக தற்சார்பு இந்தியா 3.0 என்ற பெயரில் நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. 12 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள இந்த தொகுப்பில் சுமார் 2.65 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருக்கும். புதிய தொகுப்பு தனிநபர்களுக்கும் தொழில்களுக்கும் எந்த வகையான நன்மைகளை அளிக்கிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

தனிநபர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய திட்டங்கள்:

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு தற்சார்பு இந்தியா ரோஜர் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்கும். கரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலை மீட்க, 2 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீட்டை வாங்குபவர்கள், கட்டுபவர்களுக்கு வருமான வரி நிவாரணம் அளிக்கப்படும். இதனால், வீடு வாங்குவோருக்கு அதிக வருமான வரி சலுகை கிடைக்கும்.

கோவிட்- 19 தொற்றால் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிராமப்புறத்தில் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட காரிப் கல்யாண் ரோஜர் திட்டத்தின் கீழ், 10,000 கோடி ரூபாய் வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 140 மில்லியன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உரமானியத்திற்காக 65,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

தொழில், வணிக நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்கள்:

காமத் குழுவின் பரிந்துரை அடிப்படையில், அழுத்தம் நிறைந்த துறைகளான கட்டுமானம துறை, ரியல் எஸ்டெட், ஜவுளித்தொழில் உள்ளிட்ட 26 துறைகளில் தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 18,000 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் 12 லட்சம் வீடுகள் கட்ட ஆரம்பிக்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கவும் முடியும். இத்திட்டம் நாட்டின் சிமெண்ட், இரும்பு பயன்பாட்டை உயர்த்துவதோடு மூலம் 78 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் 8,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அரசாங்க கட்டுமானம் ஒப்பந்தம் எடுப்பவர்கள், ஒப்பந்தப் பணத்தில் 5 முதல் 10 விழுக்காடு பணத்தை வைப்புத்தொகையாக கட்டவேண்டிய சூழல் இருந்த நிலையில் தற்போது அது மூன்று விழுக்காடாக குறைக்கப்படும்.

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நதியாக 6,000 கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்யும். முக்கியமாக உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள், தொழில்துறை ஊக்கத்தொகை, தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றிற்காக கூடுதலாக ரூ. 10,200 கோடி வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 9.87 லட்சம் கோடி ரூபாயை நிதி ஊக்கமாக வழங்கியுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 15 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக மந்த நிலைக்குள் தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்: ராகுல் காந்தி காட்டம்

Last Updated : Nov 12, 2020, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.