ETV Bharat / bharat

1.05 லட்சம் கோடி ரூபாய் வருவாய்: சரக்கு மற்றும் சேவை வரியில் தொடரும் சாதனை!

டெல்லி: தொடர்ந்து நான்காவது முறையாக லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாயில் சாதனை
ஜிஎஸ்டி வருவாயில் சாதனை
author img

By

Published : Mar 2, 2020, 7:24 AM IST

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் விமர்சனம் முன்வைத்துவரும் நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் மட்டும் 1.05 லட்சம் கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், மத்திய அரசுக்குச் செல்ல வேண்டிய பெரும்பான்மை பங்கான ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 20 ஆயிரத்து 569 கோடி ரூபாயாகும். மாநில அரசுக்குச் செல்ல வேண்டிய ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி 27 ஆயிரத்து 348 கோடி ரூபாயாகும்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருள்கள் விற்கும்போது விதிக்கப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி இதில் 48 ஆயிரத்து 503 கோடியாகும்.

GST revenue collection
Trends in GST Collection

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மாநிலத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கும் நோக்கில் அளிக்கப்படும் வரி இதில், எட்டாயிரத்து 947 கோடி ரூபாயாகும்.

இதையும் படிங்க: மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு - மத்திய அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.