கர்நாடக மாவட்டத்தில் உள்ள கலாபுர்கி என்ற பகுதியில் உள்ள பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கலபுார்கி தாலுகாவில் உள்ள ஃபெரோசாபாத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மகாலட்சுமி கோயில், அம்பிகாரா சவுதய்யா கோயில், பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட கல்லம்மா என்ற மூதாட்டி வீட்டின் கூரையின் மேல் அமர்ந்து போராட்டம் செய்துவருகிறார். தொடந்து மூன்று நாள்களாக உண்ணாவிரதம் இருந்து போராடிவருகிறார்.
இது குறித்து மூதாட்டி கல்லம்மா கூறுகையில், "எங்கள் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல நாள்கள் கடந்தும் அரசு சார்பில் யாரும் இதுவரை வந்து பார்க்கவில்லை. எங்கள் வீடுகள் சேதமடைந்ததையும் யாரும் விசாரிக்கவில்லை. எனவே இதனை எதிர்த்து நான் போராடிவருகிறேன்" எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு வீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அரசிடம் கோரிக்கைவைத்தார் கல்லம்மா.
இதையும் படிங்க: கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 4,389; இறப்பு - 57