வியூக ரீதியான துறைகள் பட்டியலில், அதிகபட்சம் நான்கு பொதுத் துறை நிறுவனங்களை மட்டும் அரசு வைத்துக்கொள்ளும் வகையில் புதிய பொதுத்துறை நிறுவனங்களின் கொள்கையை மத்திய அரசு தயாரித்துக்கொண்டிருப்பதாகவும், அது விரைவில் கேபினட் அமைச்சரவைக்கு கொண்டுச் செல்லப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவுள்ள புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கையின் படி அனைத்து துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசிய அவர், பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டுவர முயற்சிக்கிறது. ஆனால், பெருந்தொற்று காரணமாக முழுமையான பாதிப்பு குறித்த விவரத்தைப் பெற முடியவில்லை எனக் கூறினார். வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு, இதுவரை ஐடிபிஐ வங்கியை மட்டும் தனியார்மயப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெஹபூபா முப்திக்கு வீட்டுச்சிறை நீட்டிப்பு: ப. சிதம்பரம் கண்டனம்!