மத்திய அரசு, 43 மொபைல் செயலிகளை தடை செய்வதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அலிபாபா, டென்சென்ட், விசாட் உள்ளிட்ட செயலிகள் தற்போது தடை செய்யப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏவின் கீழ் இந்தத் தடையானது அமலுக்கு வருகிறது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தத் தடை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஜூன், செப்டம்பர் மாதத்தில் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.