ETV Bharat / bharat

அரசின் அரைவேக்காடு வாக்குறுதிகளால் சாலையில் உதிரும் உயிர்கள்

author img

By

Published : Sep 11, 2020, 5:45 AM IST

நாட்டின் சாலை விபத்தால் உயிரிழப்பவர்களில் 65 விழுக்காட்டினர் 18-35 வயதை சேர்ந்தவர்கள் எனவும் இதன் காரணமாக இந்தியாவின் 3-5 விழுக்காடு ஜி.டி.பி. இழப்பை சந்திப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார். எனவே, 2018ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க பல்வேறு கூறுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்கரி தெரிவித்தார்.

road accidents
road accidents

நாட்டின் குடிமக்களுக்கான அரசியல் சட்ட உத்தரவாதம் நெடுஞ்சாலைகளில் ரத்தம் சிந்திக்கொண்டிருப்பதை அன்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின் புள்ளிவிவரப்படி, கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சுமார் 4.37 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் வருந்ததத்தக்க செய்தியாகும்.

வேகமான பயணம் இறுதி பயணமாக அமைந்துவிடும், விரைந்து செல்கிறேன் என சொர்கத்திற்கு சென்றுவிடாதீர்கள் என பல்வேறு வாசகங்கள் அதிவேக பயணங்களை எச்சரிக்கும்விதமாக பொதுமக்களிடம் கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்தாண்டு நிகழந்த விபத்துகளில் 60 விழுக்காடு என சுமார் 86 ஆயிரத்துக்கும் மேலான மரணங்கள் அதிவேக பயணத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்.சி.ஆர்.பி. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அத்துடன் கவனமற்ற பயணம் 42 ஆயிரத்து 557 உயிர்களை பலிவாங்கியுள்ளது. எனவே, 85 விழுக்காடு சாலையோர உயிரிழப்பு கவனமற்ற, அதிவேக பயணங்கள் காரணமாக நிகழந்துள்ளதாக இந்த புள்ளிவிவரம் மூலம் தெரிவந்துள்ளது.

நாட்டின் சாலை விபத்தால் உயிரிழப்பவர்களில் 65 விழுக்காட்டினர் 18-35 வயதை சேர்ந்தவர்கள் எனவும் இதன் காரணமாக இந்தியாவின் 3-5 விழுக்காடு ஜி.டி.பி. இழப்பை சந்திப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, 2018ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க பல்வேறு கூறுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்கரி தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதில் பெரும் இடர்களை சந்தித்துவருகிறது. அதிவேக பயணம், கவனக்குறைவு என குறுகிய நோக்கில் இந்த விவகாரத்தை அனுகி உண்மை நிலையை கவனிக்கமால் அரசு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவருகிறது. இந்த மோசமான நிலையில் எத்தனை வருடங்கள் தொடரும், இதற்கு பொறுப்பேற்பது யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைத்தபாடில்லை.

நாட்டின் மோசமான சாலைகளை கண்டடைந்து அதை சீர் செய்ய உரிய வழிகளை கண்டடைவது, வாகனங்களுக்கான பாதுகாப்பு தரத்தை உயர்த்துவது, வாகன ஓட்டிகளுக்கான முறையான பயற்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ளப்போவதாக மத்திய செயலர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னரே தெரிவித்தனர்.

ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியாவை விட வேகமான வாகனப் பயணம் மேற்கொள்ளும் போதிலும் விபத்துகள் குறைவாக நடக்கின்றன என நிதின் கட்கரி ஆறு மாதத்திற்கு முன்னர் தெரிவித்தார். இதன் மூலம் வேகம் மட்டுமே விபத்துக்கு காரணமில்லை என அவர் குறிப்பிடுகிறார்.

பெரும்பாலான விபத்துகளுக்கு பொறியியல் தவறுகள், திட்டத்தில் உள்ள குளறுபடிகள் போன்ற சிக்கல்களை குறிக்கும் அமைச்சர் அதை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இன்னும் ஏன் மேற்கொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே. 786 பகுதிகள் நாட்டின் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதை சீர் செய்ய சுமார் 11 ஆயிரம் கோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்கரியின் சமீபத்திய கூற்றின்படி, இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் சுமார் 3 ஆயிரம் ஆகும். அடுத்த பத்தாண்டுக்குள் நாட்டின் சாலைவிபத்தை பாதியாக குறைக்க அரசு சுமார் 8.17 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என உலகவங்கி தெரிவிக்கிறது.

இதன் மூலம் இந்தியாவின் ஜி.டி.பி. 3.7 விழுக்காடு உயரும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் கரோனா காரணமாக அரசு பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், இந்தப் பெரும் தொகையை அரசு சீர் செய்யுமான என்பது கேள்விக்குறியே.

எனவே, ஐந்து வினாடிகளில் நூறு கிலோ மீட்டர் பிக்அப் வேகம் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூறும் கவர்ச்சி விளம்பரங்களை வாடிக்கையாளர்கள் பார்க்கும் முன்னர், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கள நிலவரத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: முதல் முறையாக, இரு அவைகளிலும் அமரப்போகும் மக்களவை எம்.பி.க்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.