கேரள அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்கான நடவடிக்களை எடுத்துவருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் e-PoS இயந்திரங்கள் வைக்கப்பட்டு பணம் எடுத்தல், மற்றொரு வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் வசதிகள் செய்து தரப்படும் என்றும் இந்தச்சேவையை முழுக்க முழுக்க ஆதார் அட்டையை வைத்து பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக , கூடிய விரைவில் பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎப்சி, கோடாக் மகிந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளுடன் கேரள அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவிருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருவனந்தபுரம் வருவாய் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருவனந்தபுரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்குபெற்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் நெகிழி பயன்பாட்டுக்கு விரைவில் தடை.!