2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மக்களவையில் இன்று (பிப்.01) தாக்கல் செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுத்துறைக்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆண்டுக்கு, விளையாட்டுத்துறைக்கு 2,596.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட 8.16 விழுக்காடு குறைவாகும்.
கடந்தாண்டு, விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் முதன்மை திட்டமான 'கேலோ இந்தியா' திட்டத்திற்கும் 890.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, 657.71 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு 660.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 160 கோடி ரூபாய் அதிகமாகும். தேசிய விளையாட்டு சம்மேளனத்திற்கு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.