ETV Bharat / bharat

ராஜஸ்தான், மபி, ஹிமாச்சல், கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி - வட மாநிலங்கள்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Government confirms bird flu
Government confirms bird flu
author img

By

Published : Jan 6, 2021, 5:00 PM IST

டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் என மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளைக் கொண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை, நிஷாத் எனப்படும் விலங்குகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. காக்கைகள், வாத்துகள், மயில்கள் என ஒவ்வொரு மாநிலங்கள் பறவையினங்கள் அழிவை சந்தித்து வருகின்றன.

பறவைக் காய்ச்சல் காரணமாக அம்மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸால் இந்தியாவில் மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுகுறித்து அரசு தரப்பில், பறவைக் காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் இதுவரை பறவைகளை உட்கொண்டவர்களை பாதிக்கவில்லை. குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு பறவைகள் மூலமே இந்த வைரஸ் பரவியுள்ளது என கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.