உலகையே உலுக்கி வரும் கரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், வீடுகளிலிருந்தபடி வேலைசெய்யும் ஊழியர்கள், பாடம் படிக்கும் மாணவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினருக்கும் இடையே ஸூம் உள்ளிட்ட வீடியோ கான்ஃபெரென்சிங் செயலிகளின் மவுசு ஏகபோகமாகக் கூடியுள்ளது.
இந்தச்சூழலில், கூகுள் நிறுவனம் அதன் பீரிமியம் வீடியோ காலிங் செயலியான 'மீட்'ஐ அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "மீட் வீடியோ கான்ஃபெரன்சிங் செயலியின் பயன்பாடு பலமடங்கு கூடியுள்ளது. கடந்த சில வாரங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இதில் இணைந்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் வாரங்களில் இந்த செயலியை அனைவரும் இலவசமாக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் க்வூட் இயக்குநர் சிமிதா ஹஷிமா கூறுகையில், "கூகுள் மீட் செயலி அனைவருக்கும் இலவசமாக்கப்பட உள்ளது. ஒரு கான்ஃபிரென்சில் 100 பேர் வரை பங்கேற்கலாம். 60 நிமிடங்கள் வரை மீட்டிங் செய்யலாம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அதனைச் செயலாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : மருத்துவர்கள், செவிலியருக்கு முழு பாதுகாப்பு உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு