ETV Bharat / bharat

செல்போனை ஆன் செய்த மகள்; ஸ்வப்னாவை ஆஃப் செய்த என்ஐஏ!

author img

By

Published : Jul 12, 2020, 1:53 PM IST

பெங்களூரு: தங்கக் கடக்கல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷையும் சந்தீப் நாயரையும் காவல் துறை உதவியுடன் என்ஐஏ கைதுசெய்தது.

NIA arrested Swapna
NIA arrested Swapna

கேரளாவில் கரோனாவின் தீவிரம் குறைந்திருந்தாலும், தங்கக் கடத்தல் வழக்கின் தீவிரம் குறைந்தபாடில்லை. அதிர்ச்சித் தகவல்களுடன் அடுத்தடுத்த நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இதில் உச்சகட்டமாக நேற்று வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் பெங்களூருவில் வைத்து தேசிய புலனாய்வை முகமை (என்ஐஏ) கைதுசெய்துள்ளது. மேலும், இவர்கள் இருவர் உள்பட நால்வர் மீது உபா சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையையும் முகமை பதிவுசெய்துள்ளது.

கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு, ஐக்கிய அரபு அமீரக தூதுரக முகவரிக்கு ராஜாங்க ரீதியிலான பார்சல் என்று குறிப்பிட்டு, சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் வந்துள்ளது. ராஜாங்க ரீதியிலான பார்சல் அலுவலர்களால் சோதனைக்குட்படுத்தப்படாது என்பதால், அதனைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இதனை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றி, தூதரகக் கடிதத்துடன் அதனை எடுக்கவந்த தூதரக அலுவலகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சரித் குமார் என்பவரையும் கைதுசெய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுபோன்ற கடத்தல் பல நாள்களாக அரங்கேறிவருவதாகவும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முன்னாள் துணைத் தூதரகச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ்தான் இக்கடத்தலில் முக்கியப் புள்ளி என்றும் அவர் சுங்கத்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்வப்னா தற்போது கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். தன்னுடைய பெயர் அடிபட்டதிலிருந்தே கடந்த சில நாள்களாக ஸ்வப்னா தலைமறைவாகியிருந்தார். இதனிடையே அவரது வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி, சுங்கத்துறையினர் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்த வழக்கிலிருந்து ஸ்வப்னாவை விடுவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, முதலமைச்சருக்கு நெருக்கமான நபர் சுங்கத்துறையிடம் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பினராயி விஜயனின் செயலராக இருந்த சிவசங்கர் அதிரடியாக அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால், கேரள அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இந்தத் தங்கக் கடத்தல் அரசு உதவியோடு நடைபெற்றிருப்பதால், தார்மீகப் பொறுப்பேற்று பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கின. இச்சூழலில், யாரும் எதிர்பாராவிதமாக, இவ்வழக்கில் மத்திய அரசின் அனைத்து முகமைகளையும் உட்படுத்தி 'தீவிர விசாரணை' மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு பினராயி கடிதம் எழுதினார்.

இதன் நடுவே, ஸ்வப்னா தான் நிராபராதி என்றும், தன்னை அரசியல் சூழ்ச்சியில் வீழ்த்த சிலர் எண்ணுவதாகவும் கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், தான் ஒரு அப்பாவி எனவும், தற்கொலை செய்து கொள்வேன் என்றும் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், அவர் ஆன்லைன் மூலமாக கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இச்சூழலில் இவ்வழக்கை விசாரிக்க என்ஐஏவுக்கு உள்துறை உத்தரவிட்டது. இதுதொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஸ்வப்னா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தொடங்கியது.

அப்போது என்ஐஏ, ஸ்வப்னா மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், அவரை முன்ஜாமின் கொடுத்தால், அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிக்கக்கூடும் என்பதால், அவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என்றும் கூறியது.

இவ்வேளையில், ஸ்வப்னாவின் மகள் அவரது தோழியைத் தொடர்புகொள்ள செல்போனை ஆன் செய்துள்ளார். இதனையறிந்த என்ஐஏ செல்போன் எண் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, காவல் துறையினரின் உதவியுடன் அவரையும் சந்தீப் நாயரையும் கையும்களவுமாகப் பிடித்து கைதுசெய்தது. இதையடுத்து பெங்களூருவிலிருந்து இன்று இருவரும் கொச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். தற்போது இருவரும் கொச்சியிலுள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏன் பயங்கரவாத தடுப்பு முகமையான என்ஐஏ தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கிறது?

இதுகுறித்து விளக்கமளித்துள்ள என்ஐஏ, “இவ்வழக்கில் சர்வதேச தொடர்பு இருக்கிறது. மேலும், முதல்கட்ட விசாரணையில் கடத்தப்படும் தங்கத்தின் வருமானம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது. ஆதலால், இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதல் குற்றவாளியாக சரித் குமார், இரண்டாம் குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ், மூன்றாம் குற்றவாளியாக ஷார்ஜாவிலிருக்கும் பாசில் ஃபரீத், நான்காம் குற்றவாளியாக சந்தீப் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; ஸ்வப்னாவுக்கு எப்படி அரசு வேலை கிடைத்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.