ETV Bharat / bharat

ஐஏஎஸ் அலுவலருடன் மூன்றுமுறை அமீரகம் பயணித்த ஸ்வப்னா சுரேஷ்...! - அமலாக்கத் துறை

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருடன் மூன்று முறை ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்துள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gold-case-accused-swapna-travelled-thrice-with-suspended-ias-officer-to-gulf-nations-during-2017-18-ed

author img

By

Published : Aug 17, 2020, 7:54 PM IST

கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் விவகாரத்தை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் தூதரக அலுவலர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே சட்டவிரோதமாக பணபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறையினரும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார்ஆகியோரிடன் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த மூவருக்கும் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, இன்று கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அமலாக்கத்துறை சார்பாக நீதிமன்றத்தில் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

அதில், '' ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கரும், ஸ்வப்னா சுரேஷும் 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒன்றாக பயணித்ததாகவும், அதேபோல் 2018ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு சென்று சிவசங்கரை ஸ்வப்னா சுரேஷ் பார்த்துள்ளார். அங்கிருந்து இருவரும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் இருவரும் ஒன்றாக மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகிய மூவரையும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

மேலும் சிவசங்கரின் அறிவுறுத்தலின்பேரில் தான் ஸ்வப்னா சுரேஷ் மூன்றாம் நபருடன் கூட்டாக தங்கக்கடத்தலில் கிடைத்த வருமானத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தது.

இதையும் படிங்க: தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் ஆந்திர அரசு - மத்திய அரசு தலையிட சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.