சுகாதாரத் துறை அமைச்சர் ரானே, மாநில சுகாதார இயக்குனர் ஜோஸ் டி சா, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் சிவானந்த் பண்டோட்கர், விமான நிலைய இயக்குனர் காகன் மாலிக் ஆகியோர் இணைந்து விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரானே, விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை முழு சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்கள் விமானத்தில் வர வாய்ப்புகள் அதிகம், எனவே பயணிகளை முழுமையாக சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அதிகமாக வெளிநாட்டவர் வருகை தரும் கோவாவில் இதுவரை ஒருவருக்கு கூட கரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.