ETV Bharat / bharat

மேற்கு வங்க அரசியலில் பின்னடைவை சந்திக்கும் பாஜக...! - பினாய் தமாங்

கொல்கத்தா : பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா, திரிணாமுல் காங்கிரஸை ஆதரிக்கு என அதன் தலைவர் பிமல் குருங் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசியலில் பின்னடைவு சந்திக்கும் பாஜக - வலுபெறும் டி.எம்.சி!

author img

By

Published : Oct 22, 2020, 2:52 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மலை பகுதியை கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா போராடி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஜி.ஜே.எம். நேற்று (அக்டோபர் 21) அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அக்கட்சியின் தலைவர் பிமல் குருங், “2009ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தோம். டார்ஜிலிங் மலைப்பகுதியின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாகவும், 11 கூர்கா பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாகவும் பாஜக அளித்த வாக்குறுதியை நம்பி, அதன் அடிப்படையிலேயே நாங்கள் என்.டி.ஏ கூட்டணியை ஆதரித்து வந்தோம்.

ஆனால், இதுநாள் வரை பாஜக அரசு அதனை நிறைவேற்றவில்லை. இதனால் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு அரசியல் பாடம் புகட்டுவோம். பழங்குடியினர் பட்டியலில் 11 கூர்கா சமூகங்களை இணைக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். அதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம்.

2021ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே எங்கள் இலக்கு. டி.எம்.சி கூட்டணியை ஆதரித்தாலும் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை. அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று அவர் கூறினார்.

குருங்கின் இந்த நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம், "சமாதானத்திற்கான பிமல் குருங்கின் உறுதிப்பாட்டை வரவேற்கிறோம், மம்தா பானர்ஜியின் தலைமையின் மீதான அவரது நம்பிக்கையையும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவையும் வரவேற்கிறோம். கூர்காலந்து பிரச்னையை கீழ்த்தரமான அரசியலுக்காகப் பயன்படுத்திவந்த பாஜகவின் உண்மை முகம் இப்போது மேற்கு வங்க மக்கள் முன் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.