இந்திய இளைஞர் காங்கிரஸ் (ஐ.ஒய்.சி) தனது வேலைவாய்ப்பின்மை தொடர்பான ரோஸ்கார் டோ பரப்புரையின் இரண்டாம் கட்டமாக, நாட்டின் வேலையற்ற இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள், கடிதங்கள், கையொப்பங்கள், சுவர் ஓவியங்கள் ஆகியவற்றை சேகரித்து வந்தது.
இந்நிலையில் தற்போது, ”பாஷான் சே பெட் நஹி பார்தா, ரோஸ்கார் டோ, ரோஸ்கார் டூ” என்று தொடங்கும் தீம் பாடலை வெளியிட்டு ஆளும் மத்திய அரசை கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தப் பாடலுக்கு ”வார்த்தைகளால் நம் வயிற்றை நிரப்ப முடியாது, வேலைவாய்ப்பையும் வழங்க முடியாது” என்று பொருள்.
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய ஐ.ஒய்.சி இணைச் செயலர் கிருஷ்ணா அல்லவாரு, "மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 40 விழுக்காடு குறைந்துள்ளது. திட்டமிடப்படாத ஊரடங்கால் பொருளாதாரம் முன்னதாக ஊர்ந்து சென்றது. ஆனால் தற்போது அது வென்டிலேட்டரை அடைந்துள்ளது.
பொருளாதார மந்தநிலை குறித்த தவறுகளை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, மோடி அரசாங்கம் பொருளாதாரத்தின் பேரழிவை 'கடவுளின் செயல்' என்று கூறியுள்ளது.
இதேபோல், நவம்பர் 2016ஆம் ஆண்டு பிரதமர் பணமதிப்பிழப்பினை அறிவித்தபோது நிறைய வேலைவாய்ப்புகள் அழிந்தன. ஜிஎஸ்டி காரணமாக, பல சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இக்கள்) பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், உங்கள் சொந்த தோல்விகளுக்கு நீங்கள் கடவுளை குறை கூற முடியாது," என்று கடுமையாக சாடியுள்ளார்.
-
Rise up for India's youth.
— Youth Congress (@IYC) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
IYC In-charge Shri @Allavaru and National President Shri @srinivasiyc along with Congress Spokesperson Shri @Pawankhera launched the second phase of #RozgarDo, IYC's nationwide initiative to demand employment for the Indian youth at AICC headquarters. pic.twitter.com/RtHJgYRhUs
">Rise up for India's youth.
— Youth Congress (@IYC) August 29, 2020
IYC In-charge Shri @Allavaru and National President Shri @srinivasiyc along with Congress Spokesperson Shri @Pawankhera launched the second phase of #RozgarDo, IYC's nationwide initiative to demand employment for the Indian youth at AICC headquarters. pic.twitter.com/RtHJgYRhUsRise up for India's youth.
— Youth Congress (@IYC) August 29, 2020
IYC In-charge Shri @Allavaru and National President Shri @srinivasiyc along with Congress Spokesperson Shri @Pawankhera launched the second phase of #RozgarDo, IYC's nationwide initiative to demand employment for the Indian youth at AICC headquarters. pic.twitter.com/RtHJgYRhUs
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா பேசுகையில், "வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளின் இல்லாத அளவிற்கு அதிகரித்து மத்திய அரசு புதிய சாதனை செய்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பே பொருளாதார நிலை பயமுறுத்தியது. சமீபத்திய அறிக்கையின்படி, தொற்று நோய் காலத்தின்போது 13.50 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஐ.ஒய்.சி தலைவர் சீனிவாஸ், "இந்த நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதத்தை பிரதமர் மோடி காண என்ன வகையான கண்ணாடி தேவை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.