திரிபுரா மாநிலம் அகர்தலா அடுத்த ரங்கச்சரா என்ற கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர், வியாழனன்று காணாமல் போனதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு அப்பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சவுரப் பால் (28) என்ற இளைஞர் மீது ஊர் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஓட்டுநராகப் பணியாற்றும் அவரைக் கைது செய்த காவல் துறையினர், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இறந்த பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும், அதன்பின் முழு தகவல்களும் தெரியவரும் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து; சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர்கள்