கர்நாடகா மாநிலம் சிவமொக்கா பகுதியில் செயல்பட்டுவரும் மெக்கான் அரசு மருத்துவமனையில், சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தாயாரை சிறுமி கவனித்துக்கொண்டு வந்துள்ளார். இவற்றை, மருத்துவமனை ஊழியர் மனோஜ், நோட்டம் விட்டுவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று, கலவரம் காரணமாக சிவமொக்கா பகுதியில் உணவகங்கள் செயல்படவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி மனோஜ் மதிய உணவு வாங்கிக்கொடுப்பதற்காக, சிறுமியை தனது காருக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது, ஏற்கனவே மனோஜ் நண்பர்கள், சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுட்டுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பித்துவந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள மனோஜை தேடிவருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.