கர்நாடாக மாநிலம், கொலர் மாவட்டம் வதகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவர் அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பி.ஏ கடைசி ஆண்டு படித்துவந்தார்.
இந்நிலையில், இன்று அப்பகுதியில் அருகே இருக்கும் ஏரிக்கு டிக்-டாக் வீடியோ எடுப்பதற்காக மாலா சென்றுள்ளார். அப்போது ஏரியின் அருகே மும்முரமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த அவர், எதிர்பாரதவிதமாக கால் தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர். உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒரே மாதத்தில் டிக்-டாக்கைப் பயன்படுத்தி கர்நாடகாவில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், தெலங்கானா மாநிலத்தில் நேற்று ஒரு இளைஞர் ஏரியில் டிக்-டாக் வீடியோ செய்யும்போது நீரில் மூழ்கி இறந்தது குறிப்பிடதக்கது.