ETV Bharat / bharat

கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் நடனமாடிய பெண்கள் - சர்ச்சையான வீடியோ - காராகா கிராமம்

பாட்னா: பொழுதுபோக்கிற்காக கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் பெண்களை நடனமாட வைத்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா
பாட்னா
author img

By

Published : May 20, 2020, 5:32 PM IST

நாட்டை உலுக்கும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றன.

அந்த வகையில், கரோனா அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், உயிரை விட பொழுதுபோக்கு தான் முக்கியம் என்று நினைத்த பிகார் மக்கள் சிலர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு பெண்களை அழைத்துவந்து நடனமாட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் உள்ள கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் அறிகுறிகள் இருப்போரை மாநில அரசு தங்க வைத்துள்ளது. அவர்களுக்குத் தேவையான சத்தான உணவுகளையும் அரசு அலுவலர்கள் முறையாக வழங்கி வருகின்றனர்.

இருப்பினும், அந்த மையத்திலிருந்த சிலர், தங்களுக்குப் பொழுதுபோகாத காரணத்தினால் மூன்று பெண்களை வரவழைத்து நடனமாட வைத்துள்ளனர். ஆடல், பாடல் என மையமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மையத்தில் இத்தகைய செயல் எவ்வாறு அரங்கேறியது என சமூக செயற்பாட்டாளர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

மையத்தில் நடனமாடும் பெண்கள்

இதுகுறித்து மாவட்டக் கூடுதல் ஆட்சியர் கூறுகையில், "கரோனா முகாமில் இதுபோன்ற செயல் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தல் மையத்திலிருக்கும் மக்களின் பொழுதுபோக்கிற்காகத் தான் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.

  • Bihar: Some dancers, called from outside, performed at a quarantine centre in Karrakh village of Samastipur dist last night. Addl Collector says "We're taking cognizance&action will be taken. We've installed TV there, admn doesn't permit for any other entertainment from outside." pic.twitter.com/err7oetDFK

    — ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: கதவை உடைத்து வெளியேறிய தனிமைப்படுத்தப்பட்ட நபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.