ETV Bharat / bharat

புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு - இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் விடுதலை! - இன்ஸ்பெக்டர் உட்பட 8 போலீசார் விடுதலை

புதுச்சேரி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 8 புதுச்சேரி போலீசார் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

புதுச்சேரி பாலியல் வழக்கு
author img

By

Published : Apr 27, 2019, 1:16 PM IST

கடந்த 2014ஆம் ஆண்டு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமிகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 சிறுமிகளை மீட்டனர். தொடர்ந்து அந்த சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையைச் சேர்ந்த சிலரும் தங்களை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும், அந்த விபசாரக் கும்பலிடம் இருந்து மேலும் 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து 2014ஆம் ஆண்டு செப்.3ஆம் தேதி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ராஜாராமன் (ஓய்வு), ஏட்டுக்கள் செல்வகுமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் உள்ளிட்ட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து அப்போதைய காவல்துறை ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் முன்பாக, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த அடையாள அணிவகுப்பில் காவலர் விஜயகுமார் நீங்கலாக 7 பேரை அடையாளம் காட்டிய சிறுமிகள், கூடுதலாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான அனுசு பாட்ஷாவை அடையாளம் காட்டினர். இதனால், அனுசு பாட்ஷாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை தீவிரமான நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாகினர். அதனால், அவர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தலைமறைவாக இருந்த 8 காவலர்களையும் பணிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார் ஐ.ஜி.பிரவீன் ரஞ்சன். மேலும், இவர்களை தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்தது.

தலைமறைவாக உள்ளவர்கள் உடனடியாக சரணடையவில்லை எனில் அவர்களின் புகைப்படம் வெளியிடப்படும் என்றும் சிபிசிஐடி கெடு விதித்ததால், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வகுமார் ஆகியோர் மட்டும் சரணடைந்தனர். ஆனால், இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் அனுசு பாட்ஷா, ராஜாராமன் (ஓய்வு), ஏட்டுகள் குமாரவேல், பண்டாரிநாதன் உள்ளிட்ட 6 பேர்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேடப்படும் குற்றவாளிகளாக சிபிசிஐடி அறிவித்தது. அனைவரும் முன் ஜாமீன் பெற்ற நிலையில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் நீதிபதி தனபால் முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றது. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. புதுச்சேரியில் பரபரப்பாகப் பேசப்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Intro:Body:

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 8 புதுச்சேரி போலீஸாரை போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமிகளை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் 2 சிறுமிகளை மீட்டனர். தொடர்ந்து அந்த சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காவல்துறையைச் சேர்ந்த சிலரும் தங்களை அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்க  அதையடுத்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதும் அந்த விபசாரக் கும்பலிடம் இருந்து மேலும் 2 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து 2014 செப்டம்பர் 3-ம் தேதி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் சுந்தர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ராஜாராமன் (ஓய்வு), ஏட்டுக்கள் செல்வகுமார், குமாரவேல், பண்டரிநாதன், காவலர்கள் விஜயகுமார், சங்கர் உள்ளிட்ட 8 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் அப்போதைய காவல்துறை ஐ.ஜி பிரவீர் ரஞ்சன். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் முன்பு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் குற்றவாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த அடையாள அணிவகுப்பில் காவலர் விஜயகுமார் நீங்கலாக 7 பேரை அடையாளம் காட்டிய சிறுமிகள், கூடுதலாக மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான அனுசு பாட்ஷாவை அடையாளம் காட்ட அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விசாரணை தீவிரமான நிலையில், அனைவரும் அப்போது தலைமறைவாகிவிட்டதால் அவர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தலைமறைவாக இருந்த 8 காவலர்களையும் பணி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார் ஐ.ஜி.பிரவீர் ரஞ்சன். அதோடு இவர்கள் அனைவரையும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் பொதுமக்களுக்கு பரிசு கொடுக்கப்படும் என்று அறிவித்த சி.பி.சி.ஐ.டி, தலைமறைவாக உள்ளவர்கள் உடனடியாக சரணடையவில்லை என்றால் அவர்களின் புகைப்படம் வெளியிடப்படும் என்றும் சிபிசிஐடி கெடு விதித்ததால், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வகுமார் ஆகியோர் சரணடைந்தனர்.

ஆனால், இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் சுந்தர், சப் இன்ஸ்பெக்டர்கள் அனுசு பாட்ஷா, ராஜராமன் (ஓய்வு), ஏட்டுகள் குமாரவேல், பண்டாரிநாதன் உள்ளிட்ட 6 பேர்களின் புகைப்படத்தை வெளியிட்ட சி.பி.சி.ஐ.டி அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது. அனைவரும் முன் ஜாமீன் பெற்ற நிலையில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாததால் 8 காவலர்கள் உள்ளிட்ட 18 பேரை விடுவிப்பதாக தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.