ETV Bharat / bharat

மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளமுடைய ராட்சத சுறா

author img

By

Published : Jan 24, 2020, 5:01 PM IST

புதுச்சேரி: மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறாவை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகில் இன்று அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பரசுராமன் என்ற மீனவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. அதனை இழுத்தபோது சுறா மீன் என தெரிந்தது.

இதனை அடுத்து சுறா மீனை படகில் ஏற்றி புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகம் பகுதியில் மீனவர்கள் இறக்கினர். பின்னர் மீன்வளத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத் துறை அலுவலர்கள் சுறாவை ஆய்வு செய்தனர். அதில் சுறாவின் பெயர் அம்மன சுறா எனவும் அது உயிரிழந்துவிட்டதாகவும், சுமார் 15 அடி நீளமும், இரண்டரை டன் எடையும் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த சுறாவால் கடலில் மீனவர்களுக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினர். இருப்பினும், சுறாவை பிடித்து வந்த வலை கிழிந்ததால் மீனவர் கவலையடைந்தார். இதற்கிடையே தகவல் அறிந்த பொதுமக்கள் ராட்சத சுறா மீனை பார்ப்பதற்கு திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க: விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது!

Intro:புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
Body:புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்

புதுச்சேரி வீராம்பட்டினம் சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகில் அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பரசு என்பவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது அதனை இழுத்தபோது சுறா மீன் என தெரிந்தது இதனை அடுத்து அதனை படகில் ஏற்றி அவர்கள் புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகம் பகுதியில் சுறா மீனை இறக்கினர் அந்த சுறா அம்மன சுறா என்றும் சுமார் 15 அடி நீளம் கொண்டதாகவும் இரண்டரை டன் எடை உடையதாக உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர் இந்த சூறாவால் கடலில் மீனவர்கள் ஆபத்து இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்சுறாவை பிடித்த போது தங்களது வளை சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

மீனவர் வலையில் சிக்கிய அம்மண சுறாவை கரையில் கிடத்தினர் இறந்த நிலையில் இருந்த சுறாவை மீன்வளத் துறையினர் வந்து ஆய்வு செய்தனர் இதற்கிடையே தகவல் அறிந்த பொதுமக்கள் ராட்சத சுறா மீனை பார்ப்பதற்கு அங்கு திரண்டனர்Conclusion:புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளம் உடைய ராட்சத சுறா பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.