விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சைனர் லைஃப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஜூன் 30ஆம் தேதி பென்சிமிடாசோல் வாயு கசிந்தது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். ஜூன் 26ஆம் தேதி அன்று கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்பை அக்ரோ-இண்டஸ்ட்ரியில் இருந்து அம்மோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
மே ஏழாம் தேதி விசாகப்பட்டினம் மாவட்டத்தில் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம், வாயு கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும், காயமடைந்த நான்கு பேருக்கு தலா ரூ .5 லட்சம் இடைக்கால இழப்பீட்டை இரண்டு வாரங்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இறுதி இழப்பீட்டை மதிப்பிடுவதற்கும், சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும், எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை மதிப்பீடு செய்வதற்காகவும் பசுமை தீர்ப்பாயம் ஒரு குழுவையை நியமித்தது.
விபத்து ஏற்பட்ட நிறுவனம் இயங்க ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தொழிற்சாலைகள் துறையும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தீர்ப்பாயம் தெரிவித்தது.
இறந்தவர்களின் வாரிசுகளுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ .15 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .5 லட்சமும் இரண்டு வாரங்களுக்குள் டெபாசிட் செய்யுமாறு ஸ்பை அக்ரோ நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.