ETV Bharat / bharat

காந்தி 150: உலக அரங்கில் காந்தியின் பங்களிப்பு

author img

By

Published : Sep 19, 2019, 9:08 AM IST

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், லோக் சட்டா இயக்கம், ஜனநாயக மறுமலர்ச்சி இயக்கங்களின் நிறுவனரான பேராசிரியர் ஜெயபிரகாஷ் நாராயணன் காந்தி குறித்து ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்துக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இதோ...

Gandhi

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவர் காந்தி. அவர் தனது சிந்தை, பேச்சு, செயல்களால் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். அன்று உலகில் நிலவிவந்த ஆதிக்கம், அடிமைத்தளையை நீக்க சத்தியாகிரகம், அகிம்சை போன்ற வலிமையான ஆயுதங்களைக் கையிலெடுத்தார் காந்தி. சமரசமற்ற உறுதியான காந்தியின் செயல்பாடுகள் உலகின் போக்கையே மாற்றியமைத்தது எனலாம்.

'காந்தியின் அகிம்சை பண்பு கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் செல்லுபடியாகுமா?, ஜெர்மனியில் ஈவு இரக்கமின்றி இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ஆட்சியாளர்கள் போன்றோரிடம் அகிம்சை முறை சாத்தியமா?' என்ற கேள்விகள் காந்தியிடம் எழுப்பப்படுவதுண்டு. காந்தி தனது நடவடிக்கைகள் அனைத்தையும் பெரும் சிந்தனைக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தியுள்ளார். இடம், சூழலுக்கு ஏற்றவாறு காந்தியின் சத்தியாகிரகப் போராட்டங்கள் வடிவம் பெற்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காந்தி இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது தெற்காசியா தொடங்கி உலகளவில் பல்வேறு தலைவர்களின் ஆதர்சமாக இருந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி நடவடிக்கைக்கு எதிராகக் காந்திய போரட்ட வழியை முன்னெடுத்தவர் பெனிகோ அக்வினோ. அவரின் இந்த முயற்சியால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மார்கோஸின் சர்வாதிகாரம் நீங்கி ஜனநாயகம் மலர்ந்தது.

ராணுவத்தின் அடக்குமுறை ஆட்சியில் சிக்கித் தவித்த தென்கொரியாவில், 1987ஆம் ஆண்டு தொடங்கி 2003ஆம் ஆண்டுவரை ஜனநாயகத்திற்கான அடித்தளத்தை கிம் யங் சாம், கிம் டே ஜங் என்ற இரு தலைவர்கள் உருவாக்கினர். இவர்கள் இருவரும் காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள்.

அங் சன் சுயி
ஆங் சாங் சூகி

மியான்மரில் தற்போது தலைமை வகிக்கும் ஆங் சாங் சூகி, தனது பொதுவாழ்வில் காந்தியின் பாதிப்பு குறித்து தொடர்ச்சியாகப் பேசியுள்ளார். அரசின் அடக்குமுறையை எதிர்த்தால் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் சூகி. பின்னாளில் தனது போராட்டத்தில் வெற்றிகண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்று அந்நாட்டின் தலைவராகவும் உருவெடுத்தார்.

கறுப்பினத்தின் உரிமை போராளியாகக் கருதப்படும் நெல்சன் மண்டேலா காந்தியின் சீடர்களுள் ஒருவராகவே கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் காந்திய வழி போராட்டத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மண்டேலா. காந்தியை புனிதப் போராளியாகக் கூறும் மண்டேலா, 21ஆம் நூற்றாண்டின் அமைதிக்காக அகிம்சை என்ற தத்துவத்தைத் தந்தவர் காந்தி என்று குறிப்பிடுகிறார்.

mandela
கறுப்பினத் தலைவர் மண்டேலா

அமெரிக்க கறுப்பர்களின் உரிமைப் போராளியான மார்டின் லூதர் கிங், காந்தியை இயேசுவைப் போன்ற இறை தூதுவராக பார்ப்பதாகக் கூறுகிறார். அமெரிக்க கறுப்பின மக்களின் சிவில் உரிமைக்காகப் போராடிய லூதர் கிங் அன்பு, உண்மை ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டு எதிரியை வீழ்த்தும் யுக்தியை காந்தியிடம் கற்றதாகக் குறிப்பிடுகிறார்.

இவர்கள் மட்டுமல்லாது புத்தமத துறவி தலாய் லாமா, சூழலியலாளர் அல்கோர், மெக்ஸிக - அமெரிக்க உரிமைப் போராளி சீசர் சாவேஸ் ஆகியோரும் தனது வாழ்வில் காந்திய வழியைத் தேர்வு செய்தவர்களே.

தனது வாழ்நாளில் காந்தியையே உந்துசக்தியாகப் பார்ப்பதாகக் கூறும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பாரக் ஒபாமா, சாதாரண மனிதன் அசாதாரண காரியங்களைச் செய்ய முடியும் என காந்திதான் கற்றுத் தந்தாக குறிப்பிடுகிறார்.

Obama
அமெரிக்க அதிபர் ஒபாமா

காந்தியின் பண்புகள், அநீதிக்கு எதிராக அவர் முன்னெடுத்த போராட்ட முறைகள் இன்றளவும் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பெண் விடுதலை உள்ளிட்ட முற்போக்கு அம்சங்களில் உலகிற்கு இன்று வழிகாட்டியாகத் திகழ்ந்துவருகிறார் காந்தி.

Intro:Body:

Gandhi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.