'காந்திய சித்தாந்தம் என்பது நிலையானது, நாடுகள் கடந்து உலகத்துக்கே பொருந்தக் கூடிய ஒன்று'
காந்தியின் சிந்தனைகளைப் பற்றிப் பேசிய துஷார் காந்தி, "மனித இனம் கண்டுபிடித்த சித்தாந்தங்களிலே மிகவும் உயர்ந்த மற்றும் நிலையான சித்தாந்தம் காந்திய சித்தாந்தம். தற்போது நாம் வாழும் இந்த வாழ்கை முறையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பார்க்கும்போது, காந்திய சித்தாந்தங்களே இதற்கான சிறந்த தீர்வாகத் தோன்றுகிறது. காந்தியடிகள் இறந்து இத்தனை காலமாக இந்த சித்தாந்தம் நீடித்ததன் மூலம் காந்திய சித்தாந்தங்கள் காலங்கள் கடந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218435_sdfv-3.jpg)
காந்திய சித்தாந்தங்கள் நவீன கால கண்டுபிடிப்பு அல்ல என்றார். ஏனெனில் காந்தியின் சிந்தனைகள் மேம்பட்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. "நிலையான வாழ்க்கை வாழ, காந்திய பாதையே சிறந்தது. நாம் மற்றவர்கள் பின்பற்றும் சித்தாந்தங்களையும் இயற்கையையும் மதித்து வாழ காந்திய சித்தாந்தங்களே சிறந்தது. இதனாலேயே தற்போது காந்தியம் உலகளவில் கவனிக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218435_sdfv-5.jpg)
'கலவரங்கள் ஏற்படாமல் தடுத்திருப்பார் காந்தியடிகள்'
"இன்றைய சகிப்புத்தன்மையற்ற வன்முறை நிறைந்த சமூகத்தில் எதிர்வினையாற்றக் காந்தியடிகள் நீண்ட நேரம் எடுத்திருக்கமாட்டார். மற்றவர்களை துன்புறுத்தும் வன்முறைகள் தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாகிவிட்டது. வன்முறையில் ஈடுபடுபவர்களும் அதுவும் ஒரு சராசரி வாழ்க்கைமுறை என்றே கருதுகின்றனர். இந்த அநியாயங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பவர்களே அதை செய்பவர்களை விட ஆபத்தானவர்கள்" என்றார்.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218435_sdfv-1.jpg)
"மகாத்மா காந்தி சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு உடனடி தற்காலிக நிவாரணத்தைத் தர விரும்பவில்லை, பிரச்னை எங்கே என்பதை அறிந்து அதற்கு ஒரு நிரந்தர தீர்வைத் தர முயலும் ஒரு சிறந்த மருத்துவர் போலவே செயல்பட்டார். சமூகத்தில் நிலவும் தீமைக்கான அறிகுறிகளை நாம் உணர்வதற்குப் பல காலம் முன்பே காந்தி அதை உணர்ந்திருந்தார்".
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218435_sdfv-2.jpg)
பயங்கரவாதம் இன்று பரவுகிறது, ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்காது'
"தற்போது நாம் முழுவதும் நம்பிக்கைற்றவற்களாக உணர்கிறோம். தீவிர சிந்தனைகள் உலகளவில் பரவி வருகிறது. பயங்கரவாதமும், சகிப்புத்தன்மையற்ற சிந்தனைகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையடைந்து வருகிறது" என்றார். பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களும் தங்கள் சித்தாந்தம் நிலையானது இல்லை என தெரியும், அதனாலேயே அந்த நோக்கங்களை அடையத் பயங்கரவாதிகள் அவசரம் காட்டுவதாகவும் கூறினார்.
மேலும் " நாம் எல்லாவற்றையும் இழந்ததாக நம்பிக்கை இல்லாமல் எப்போதெல்லாம் உணர்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் மீண்டும் காந்திய சித்தாந்தங்களை நோக்கித் திரும்புகிறோம். ஜனநாயகம்தான் நிலையானதே தவிர, தீவிரவாதம் இல்லை" என்று தெரிவித்தார்.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218435_sdfv-4.jpg)
'கோட்ஸேவை கதாநாயகனாக இன்று சித்தரிக்க முயலும் சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்'
"ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், அவரின் மனம் அசுத்தமானதாக இருந்தால், அவர்கள் பலமடங்கு அசுத்தத்தையே தொடர்ந்து உருவாக்குவார்கள்" என்று கூறினார்.
"இயற்கையால் மனிதர்கள் அமைதியையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் வாழ விரும்புகிறார்கள். இன்று வெறுப்புணர்வை நோக்கி மக்கள் அணிதிரள்வது அசாதாரணமானது ஒன்று. இது நம் உடலில் ஏற்படும் ஒரு பாதிப்பைப் போன்றதே. இதற்கும் ஒரு சிகிச்சை உண்டு" என்று அவர் கூறினார்.
"கோட்சேவை இன்று சிலர் திட்டமிட்டு கதாநாயகன் போல முன்னிறுத்துகின்றனர். இதுபோன்ற காலங்களில், வேகமாகக் காந்திய சித்தாந்தங்களை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும். இந்த தலைமுறையை ஏற்கனவே இழந்துவிட்டோம், குறைந்தபட்சம் அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுவதற்கான பணிகளையாவது நாம் விரைந்து செய்யவேண்டும்" என்றார்.
"வெறுப்பைப் பரப்பும் சித்தாந்தம் மனிதக்குலத்துடன் நின்றுவிடுவதில்லை. அது இயற்கையையும் அச்சுறுத்துகிறது. ஒருவர் எப்போதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. மோசமான இருண்ட காலங்களில் கூட, நம்பிக்கை என்பது இருந்துகொண்டுதான் இருக்கிறது, " என்றார்.
'காந்தியின் மரணத்திற்குப் பிறகும், அவரது சிந்தனைகள் உலகெங்கிலும் போராட்டங்களைத் தூண்டியது'
"காந்திய சிந்தனைகள் முழுமையானது என்றவர், காந்திய சிந்தனைகளைப் புரிந்து கொள்ள வேண்டியதே அவசியம். அதை ஒருவரிடத்தில் வலுக்கட்டாயமாகப் புகுத்த முடியாது, அதை ஒருவர் தானாகவே புரிந்து கொள்ளவேண்டும். இப்போது யாரும் காந்திய சிந்தனைகளைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதே அனைத்து பிரச்னைக்கும் காரணம். ஆனால் விரைவில் அனைவரும் காந்தியத்தைப் புரிந்துகொள்வார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
![Gandhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4218584_314_4218584_1566548797256.png)
"அண்ணல் காந்தியை கொன்ற பின்னும் கூட அவரது சித்தாந்தத்தங்களை அழிக்க முடியாது என்பதை காந்தியைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள் புரிந்திருப்பார்கள். காந்திய சித்தாந்தத்தை ஒருவரால் எப்போதும் ஓரங்கட்டிவிட முடியாது" என்றும் உறுதியாகக் கூறினார்.