ETV Bharat / bharat

கவுதம் கம்பீர் வேட்புமனு தாக்கல்! - டெல்லி

டெல்லி: மக்களவைப் பொதுத்தேர்தலில் டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

கவுதம் காம்பீர் வேட்புமனுத் தாக்கல்!
author img

By

Published : Apr 23, 2019, 8:14 PM IST

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நீண்ட காலம் களமிறங்கிய கவுதம் கம்பீர், 2018ஆம் ஆண்டு டெல்லி மற்றும் ஹைதராபாத் இடையே நடந்த ராஞ்சி தொடர் போட்டியோடு அனைத்து தரப்பு கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுப்பெற்றார்.

இதையடுத்து, மார்ச் 22ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் நிதின் கட்கரி முன்னிலையில் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார். நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், இவர் டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்தது.

இந்நிலையில் இன்று திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்த கவுதம் கம்பீர், தனது வேட்புமனுவை டெல்லி கிழக்குத் தொகுதியில் தாக்கல் செய்தார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.