ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த ஜி.சி. முர்மு தனது பதவியை நேற்று முன் தினம் (ஆக. 5) ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளராக (CAG) கிரிஷ் சந்திர முர்மு நேற்று (ஆக.6) நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, அப்பதவியிலிருந்த ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், கிரிஷ் சந்திர முர்மு தலைமை கணக்குத் தணிக்கையாளராக (CAG) நாளை (ஆக. 8) பதவியேற்கவுள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராகவும், அமித்ஷா உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய ஐஏஎஸ் அலுவலர்களில் ஒருவர் முர்மு ஆவார். பிரதமராக மோடி பதவியேற்றப் பின் மத்தியப் பணிக்கு அழைக்கப்பட்ட முர்மு, மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரி்க்கப்பட்டபோது அதன் முதல் துணை நிலை ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க....ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை நிலை ஆளுநர் சிஏஜி ஆக நியமனம்