கொல்கத்தா: எல்லையில் அத்துமீறியவர்களுக்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கற்பனை செய்த சக்தி வாய்ந்த இந்தியாவை உலகம் பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு விக்டோரியா மெமோரியலில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நேதாஜி நம்மை ஆசீர்வதிக்கிறார். எல்.ஐ.சி முதல் எல்.ஓ.சி வரை, நேதாஜியால் கற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் அவதாரத்தை உலகம் காண்கிறது. இந்தியாவின் இறையாண்மையை சவால் செய்ய முயற்சித்தவர்களுக்கு பொருத்தமான பதிலை அளித்துள்ளது” என்றார்.
எனினும் எல்.ஓ.சி என்பது பாகிஸ்தான் நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், எல்ஒசி என்பத சீன ராணுவத்தின் வன்முறையையும் குறிக்கிறது. தொடர்ந்து நரேந்திர மோடி பேசுகையில், “உலகம் பெண்களின் உரிமைகள் குறித்து விவாதித்துக்கொண்டிருக்கையில், நேதாஜி 'ராணி ஜான்சி ரெஜிமென்ட்' மற்றும் சுதந்திர இயக்கத்துடன் தொடர்புடைய பெண்களை உருவாக்கினார்.
"அவர் நவீன போருக்கான பயிற்சியளித்தார், படையினருக்கு நாட்டிற்காக வாழ்வதற்கான தைரியத்தையும், நாட்டிற்காக இறப்பதற்கான ஒரு நோக்கத்தையும் கொடுத்தார். நான் அவரை வணங்குகிறேன். அவரது தாயை வணங்குகிறேன். குழந்தை சுபாஸை தலைவனாக மாற்றிய வங்காளத்தின் இந்த நல்ல நிலத்தையும் வணங்குகிறேன்” என்றார்.
இதையடுத்து, “சுதந்திர இந்திய தேசத்திற்கு அடித்தளம் அமைப்பதாக நேதாஜி உறுதிமொழி எடுத்துள்ளார். அந்தமான் தீவுகளில் மூவர்ணத்தை ஏற்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தின் முதல் தலைவர் நேதாஜி” என்றார்.
மேலும், “நேதாஜியின் பாரிய புகழுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள ரோஸ் தீவுக்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ட்வீப் என்றும், நீல் தீவு ஷாஹீத் ட்வீப் என்றும், ஹேவ்லாக் தீவு ஸ்வராஜ் ட்வீப் என்றும் பெயர் மாற்றம் செய்வதாக பிரதமர் அறிவித்தார்.
தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்ற ஐ.என்.ஏ வீரர்களையும் அவர் நினைவுக்கூர்ந்தார். அப்போது நேதாஜி தொடர்பான கோப்புகளும் மக்களின் உணர்வுகளை உணர்ந்து பகிரங்கப்படுத்தப்பட்டன என்று தெரிவித்தார்.